’49 ஓ’ விமர்சனம்

49-0-1கவுண்ட மணியின் புகழ் பிம்பத்தையும் நக்கல் நையாண்டி பாணியையும் மட்டும் நம்பி உருவாகியுள்ள படம்.

விவசாயத்தைப் பலரும் மறந்து உணர்வு மரத்துப்போய் கிடக்கிற இச்சூழலில் விவசாய நிலங்கள் பற்றிய பிரச்சினையைப் படமாக்க நினைத்ததற்கே இயக்குநர் ஆரோக்கியதாஸை பாராட்டலாம். இந்த முழுநீளப் படத்தையும் தன் தோளில் சுமந்து ஒத்துழைப்பு கொடுத்ததற்கு கவுண்டமணியையும் பாராட்டலாம்.

விவசாயத்துக்கு ஊரில் நீர் பற்றாக்குறை, மழையில்லை, பாசனம் இல்லை. எனவே விவசாயத்தை நம்பிப் பலனில்லை என்கிற முடிவில் விரக்தியாக இருக்கிறார்கள். அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் கும்பல் அவர்களின் நிலத்தை எல்லாம் வாங்கிக் கொள்கிறது. அப்போது கவுண்டமணி எச்சரிக்கை செய்கிறார் யாரும் கேட்கவில்லை. பத்திரப் பதிவு செய்து விட்டு பணம் தராமலும் இழுத்தடிக்கவே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்.

கவுண்டமணியிடம் முறையிடுகிறார்கள்.அவர்களை அவர்  பின்னர் எப்படி புத்திசாலித் தனமாக மீட்கிறார் என்பதே கதை.

49-0சவுரியாக வருகிறார்  கவுண்டமணி. ஆங்காங்கே அரசியல், நாட்டு நடப்பு என்று சரமாரியாகப் போட்டுத் தாக்குகிறார். எம்.எல்.ஏ. பூமிநாதனாக வரும் ஜெயபாலன் அவரின் வாரிசாக திருமுருகன். அரசியல் வாதியாக பாலாசிங் விளம்பரப்பட இயக்குநராக மொட்டை ராஜேந்திரன், மட்டுமல்ல சாம்ஸ் ,விசாலினி எனப் பலர் நடித்துள்ளனர். கே. இசையில் பாடல்கள் ஓகே. கிராமத்துப் பயிர்பச்சைகள் அழகு.

சுடுகாடு இருகில் இருந்தால் நிலத்தை யாரும் வாங்க மாட்டார்கள். என்று மற்றவர் நிலங்களை விற்காமல் இருக்க ஆறடி தாய்மடித்திட்டம் என்கிற கவுண்டமணியின் திட்டம் நல்ல கற்பனை.
சில காட்சிகள் மிகை. குறிப்பாக விளம்பரப் படம் எடுக்கும் காட்சியில் கவுண்டமணியின் நடிப்பும் வசனங்களும் டூ மச்.நல்ல சமூக விழிப்பு ஊட்டும் இந்தக்காலத்துக்கு ஏற்ற கதை. நன்று ஆனால் .காலம் எவ்வளவோ மாறிவிட்டது. இந்த இயக்குநர் கதை சொல்லும் விதம் மாறவில்லை.அந்தக்கால பாணியில் கூறியுள்ளார். அதுதான் படத்தின் பலவீனம்.இருந்தாலும் நல்ல கருத்தை சொல்லமுயன்ற இயக்குநரைப் பாராட்டலாம்.