6000 மாணவர்கள் முன்னிலையில், கல்லூரி மாணவர்கள் வெளியிட்ட ‘பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின், முதல் சிங்கிள் பாடல் !

அறிமுக இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில், லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்வைவல் திரில்லர் திரைப்படம் ‘பருந்தாகுது ஊர் குருவி’. நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் முதல் பாடலான “மதயானைக்கூட்டம்…” வெளியாகி வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ’கே.பி.ஆர் இன்ஸ்டியூஷன் கோயமுத்தூர் ஃபெஸ்டா 2023’ கல்லூரி விழாவில் 6 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில், மாணவர்களால் ‘பருந்தாகுது ஊர் குருவி’ படத்தின் லிரிகல் பாடல் ‘மதயானைக்கூட்டம்’ வெளியிடப்பட்டது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மதயானைக்கூட்டம் பாடல் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் ரெஞ்சித் உண்ணி இசையில் அவரும் ராகுல் நம்பியாரும் இணைந்து பாடியுள்ள இப்பாடலை, பாடலாசிரியர் விதாகர் எழுதியுள்ளார். படத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்பாடல், படத்தின் மீதான ஆவலைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.

இணையம் முழுக்க வைரலாகி வரும் இப்பாடல் யூடூயுப் தளத்தில் பெரும் பார்வை எண்ணிக்கைகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும், இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனைத் தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாகப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையைப் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். ‘வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒரு போதும் நிலைக்காது…’ எனும் கருத்தில், திறமை மிகு இளைஞர்கள் குழுவின் முயற்சியில், பரபர திரில் பயணமாக உருவாகியுள்ளது “பருந்தாகுது ஊர் குருவி” படம்.

இப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மும்பை மாடல் காயத்திரி ஐயர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ராட்சசன் வினோத் சாகர், அருள் D சங்கர், கோடங்கி வடிவேல், E ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media தனது முதல் படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. சுரேஷ் EAV, சுந்தர கிருஷ்ணா P.,வெங்கி சந்திரசேகர் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவில் ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர்கள் – ( டான் படப்புகழ் )நாகூரான் ராமசந்திரன் – நெல்சன் அந்தோணி, இசை – ரெஞ்சித் உண்ணி, சண்டைக் காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு – AIM சதீஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.