சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ – ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்!

‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.  இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.  மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.  சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை  உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார் தம்பி இராமையா அவர்கள், ‘இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார். முனிஸ்காந்த் அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார்.  சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருக்கும்.  இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.  தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘”தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும்  தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’. இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார். ஜீ5 ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13  அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ – ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்! Read More

துர்வா – சினேகன் – சாக்‌ஷி அகர்வால் – பிரனய் – ஷிரா நடிக்கும்’குறுக்கு வழி’

இயக்குநர் N.T.நந்தா இயக்கத்தில் துர்வா – சினேகன் – சாக்‌ஷி அகர்வால் – பிரனய் – ஷிரா நடிக்கும் “குறுக்கு வழி” ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வல்லதேசம் வெற்றிக்கு பிறகு இயக்குநர் N.T.நந்தா இயக்கும் இரண்டாவது …

துர்வா – சினேகன் – சாக்‌ஷி அகர்வால் – பிரனய் – ஷிரா நடிக்கும்’குறுக்கு வழி’ Read More

‘ ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தங்கர்பச்சான் பாராட்டு!

பெரும் எதிர்பார்ப்புக் கிடையில் ‘ருத்ர தாண்டவம் ‘ படம் வெளியாகிறது.. இப்படம் பற்றி பலவாறான கருத்துகள் நிலவுகின்றன;பரப்பப்படுகின்றன . படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் தங்கர்பச்சான் பாராட்டி உள்ளார். அவர் தனது அறிக்கையில் இயக்குநர் மோகனை இவ்வாறு பாராட்டுகிறார். “இயக்குநர் மோகன் அவர்களுக்கு …

‘ ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தங்கர்பச்சான் பாராட்டு! Read More

‘நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு ‘ A’ சான்றிதழ்!

டிக் டாக் மூலம் தனது சில நிமிடக் கவர்ச்சி நடன வீடியோக்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் இலக்கியா. இவரது கவர்ச்சி நடன வீடியோக்கள் புகழ் பெற்றதால் இவர் ” டிக்டாக் இலக்கியா ” என்று அழைக்கப்படுகிறார். இவரைப் பிரதான நாயகியாக வைத்து …

‘நீ சுடத்தான் வந்தியா’ படத்திற்கு ‘ A’ சான்றிதழ்! Read More

இந்தியத் திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன் !

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அவர்களின் பன்மொழி இந்தியப் திரைப்படமானLIGER ( saala Crossbreed )படத்தில் வரலாற்று நாயகன் உலகப்புகழ் குத்து சண்டை வீரர் மைக் டைசன் இணைகிறார் ! கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் …

இந்தியத் திரையுலகில் கால் பதிக்கும் மைக் டைசன் ! Read More

‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

‘சூது கவ்வும் ‘திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் தான் “பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்படம். Head Media works தயாரித்துள்ள, இப்படத்தை Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI …

‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா! Read More

‘ஆன்டி இண்டியனு’க்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன்!

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஆன்டி இண்டியன்’. சினிமா விமர்சகராக இருந்து, இயக்குநராக மாறியுள்ள மாறன் இயக்கிய படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. அதே …

‘ஆன்டி இண்டியனு’க்காக நீதிமன்றம் சென்று போராடி சான்றிதழ் பெற்ற புளூ சட்டை மாறன்! Read More

யாஷிகா ஆனந்த் நடித்த’ பெஸ்டி’ திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.!

ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனம் ஓம் முருகா படப்புகழ் அசோக் குமார் மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த ” பெஸ்டி ” திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் …

யாஷிகா ஆனந்த் நடித்த’ பெஸ்டி’ திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.! Read More

விஜயின் 66வது படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பீட்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், படத்தை பொங்கல் பண்டிகையன்று வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் விஜயின் புதிய படத்தின் அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. விஜயின் 66 வது …

விஜயின் 66வது படம் – அதிகாரபூர்வ அறிவிப்பு! Read More

ஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணம் தான்’சிவகுமாரின் சபதம்’ -ஹிப்ஹாப் ஆதி

தமிழக இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீண்டும் இயக்குநராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. Inde Rebels நிறுவனத்துடன் இணைந்து சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் TG தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இணைந்து இப்படத்தை …

ஒரு மிடில்கிளாஸ் பையனின் உணர்வுபூர்வமான பயணம் தான்’சிவகுமாரின் சபதம்’ -ஹிப்ஹாப் ஆதி Read More