அபிஷேக் நாமாவின் இயக்கத்தில் உருவான ‘நாகபந்தம் ‘ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் படக் குழுவினர் இந்தியா முழுவதும் படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
விராட் கர்ணா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இது படத்தின் கதைக்களம் மற்றும் அதன் விவரிக்கும் உலகத்தை விரிவாக அறிமுகப்படுத்துகிறது.
இந்த முன்னோட்டத்தின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள புனிதமான அனந்தபத்மநாப சுவாமி கோயில் இடம் பிடித்திருக்கிறது. அங்கு அனைவராலும் போற்றப்படும் ‘பிரம்ம கமலம்’ என்பது சாதாரண தங்க தாமரை மலர் மட்டுமல்ல என்பதை ஒரு பூசாரி வெளிப்படுத்துகிறார்.
பல நூற்றாண்டுகளாக படையெடுப்பாளர்கள் மற்றும் புதையல் வேட்டையர்களின் எண்ணற்ற தொடர் முயற்சிகள் இருந்த போதிலும்… அந்த தெய்வீக பொருள் ஒருபோதும் திருடப்படவில்லை.
கற்பனைக்கு எட்டாத- கற்பனை செய்து பார்த்திட இயலாத- சக்திகளை பெறுவதற்காக ஒரு வலிமை வாய்ந்த தீய சக்தி அதை கைப்பற்ற முயலும் போது, சிவபெருமான் அங்கு தோன்றி அதை பாதுகாக்க நாக சாதுக்களுடன் கைகோர்க்கிறார்.
கோயிலை பாதுகாக்கும் மர்மமான ‘நாக பந்தம்’ பற்றிய குறிப்புடன் இப்படத்தின் முன்னோட்டம் நிறைவடைகிறது. இது தெய்வீக சக்திக்கும், தீமைக்கும் இடையிலான ஒரு காவிய மோதலுக்கான களத்தை அமைக்கிறது.
இந்திய புராணங்கள் வரலாறு மற்றும் கோயில் சார்ந்த மரபுகள் குறித்து இயக்குநர் அபிஷேக் நாமா மேற்கொண்ட விரிவான ஆய்வுகள்… இந்த முன்னோட்டம் முழுவதும் வெளிப்படுகிறது.
சுவாரசியமான விவரங்கள் மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் நிறைந்த இது… பல காலகட்டங்களை உள்ளடக்கிய ஒரு கதைக்களத்தை முன்னிறுத்துகிறது.
புராணம்- வரலாறு- மர்மம் மற்றும் சாகசம் -ஆகியவற்றை ஒரே சினிமா அனுபவத்துடன் இணைக்கும் வகையில் இதன் கதை சொல்லும் விதம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.
மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள’ நாக பந்தம்’ தனது பிரம்மாண்டமான விஷுவல்கள் மூலம் பார்வையாளர்களை கவர்கிறது.
படத்தின் பிரம்மாண்டமான கதைக்களம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. தயாரிப்பு வடிவமைப்பாளர் அசோக் குமார் பிரம்மாண்டமான மற்றும் நுட்பமான விவரங்களுடன் கூடிய அரங்குகளை உருவாக்கியுள்ளார்.
அனந்த பத்மநாப சுவாமி கோயில் மற்றும் அதன் கம்பீரமான மூலவர் சிலை ஆகியவை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள விதம்…. படத்தின் முதன்மையான சிறப்பம்சங்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ். சௌந்தர்ராஜன் படத்தின் ஆன்மீக சாராம்சத்தையும், பிரம்மாண்ட அளவையும் அழகாக நேர்த்தியுடன் படம்பிடித்து பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறார்.
காட்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இசையமைப்பாளர்கள் ஜூனைத் கான் மற்றும் அபே ( Abhe) ஆகியோரின் இசை அமைந்துள்ளது. இவர்களின் பின்னணி இசை- கதையின் பக்தி உணர்வையும், உணர்வுபூர்வமான ஆழத்தையும் ஒரு சேர மேம்படுத்துகிறது.
படத்தின் சண்டைக் காட்சிகளும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இத்தகைய பிரம்மாண்டமான மற்றும் லட்சியமிக்க படைப்பிற்காக சமரசமற்ற தயாரிப்பு தரத்துடன் படைப்பை வழங்கிய என் ஐ கே ஸ்டுடியோவின் ( NIK Studio) தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகி ரெட்டி ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். குறிப்பாக இதில் இடம் பிடித்துள்ள வி எஃப் எக்ஸ் VFX பணிகள் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளன.
இப்படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர் தனது குறிப்பிடத்தக்க திரை தோற்றத்தையும் ,வசீகரத்தையும் வெளிப்படுத்துகிறார்.
சாதாரணமான மனிதனாகவும் … சிவபெருமானாகவும்… என இரண்டு வித தோற்றங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் விராட் கர்ணா தோன்றுகிறார் என முன்னோட்டம் தெரிவிக்கிறது. அவரது உடல் மாற்றம், கம்பீரமான தோற்றம் மற்றும் கதாபாத்திரத்தின் மீதான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு ஆகியவை படம் முழுவதும் தெளிவாக தெரிகிறது.
மேலும் கதையில் முக்கிய பங்குவகிக்கவிருக்கும் ஒரு வலுவான நட்சத்திரக் கூட்டத்தையும் குறிக்கும் வகையில் பல முக்கிய துணை கதாபாத்திரங்களின் தோற்றத்தையும் இந்த ட்ரெய்லர் வழங்குகிறது.
மொத்தத்தில் பழங்கால புராணங்கள் – மறைக்கப்பட்ட புதையல்கள் – தெய்வீக மர்மங்கள் – ஆகியவை அடங்கிய கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு புராண சாகச படமாக ‘நாகபந்தம் ‘ இருக்கும் என ட்ரெய்லர் உறுதிப்படுத்துகிறது.


