அசல் தமிழ்ப் படங்களைக் கிலிபிடிக்க வைத்துள்ள ‘ புலிமுருகன்’ 300 திரையரங்குகளில் வெளியாகிறது!

mohanlal444 மலையாளத்  திரையுலகின் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு  150 கோடி வசூல் சாதனை செய்த படம் “ புலிமுருகன் “

மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமான  புலிமுருகன் அதே பெயரில் தமிழில்          3 D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் புலிமுருகன் படத்தை தமிழிலும் உருவாக்குகிறார். கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். மற்றும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படமாக புலிமுருகன் படம் உருவாகி இருக்கிறது.

கதை, திரைக்கதை   –     உதயகிருஷ்ணா.

இந்த பிரமாதமான படத்தை இயக்கி இருப்பவர்  –   வைஷாக்

இந்த படத்திற்கு  வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர்  ஆர்.பி.பாலா.

mohanlal4புலிமுருகன் படம் வருகிற 16 ம் தேதி தமிழகம்  முழுவதும் 300 திரையரங்குகளில் வெளியாகிறது. பாகுபலி படத்திற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மொழிமாற்று திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாவது புலிமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தமிழகமெங்கும் செந்தூர் சினிமாஸ் பட நிறுவனம் வெளியிடுகிறது.