இயக்குநர் பேரரசுக்கு டாக்டர் பட்டம்!

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, பழனி ,திருவண்ணாமலை என்று ஊர்களின் பெயரில் படங்கள் இயக்கி ஊரரசு என்று பெயர் பெற்றவர் இயக்குநர் பேரரசு . பாண்டிச்சேரியில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
 
சமூக அக்கறையுடனும், தொடர்ந்து பாச உறவுகளைப் போற்றியும் திரைப்படம் எடுத்ததற்காக பாண்டிச்சேரியில் நடைபெற்ற குளோபல் பீஸ் யுனிவர்சிட்டியின் பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டம்  அவருக்கு வழங்கப்பட்டது.டாக்டர் பேரரசுக்கு வாழ்த்துக்கள்!