எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் :  துவக்கி வைக்கிறார்.

காமராஜ் Theingmaker, முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்ட ரமணாகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக தயாரிக்கிறது.

எம்.ஜி.ஆரின் வரலாறு அவரது பாய்ஸ் நாடக கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை,அண்ணாவுடன் சந்திப்பு, அரசியல் வாழ்க்கை, பின் தமிழக முதல்வராய் உயர்ந்தது வரை படமாக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி பல்துறை வல்லுனராக இருந்தார். அவ்வாழ்வு மிகுந்த பொருட் செலவில்பிரம்மாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது.

ஏழை எளிய மக்களின் கதாநாயகராக, மக்கள் திலகமாக விளங்கி வரும் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றுத் திரைப்படம்அவரின் நூற்றாண்டு விழாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும்.

நவம்பர் 8, புதன்கிழமை படப்பிடிப்பை தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்,விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.

தயாரிப்பு ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில்

அ.பாலகிருஷ்ணன்.