எஸ்கேப் ஆர்டிஸ்ட் வெளியிடுகிற அர்னால்டின் டெர்மினேட்டர்!

arnold-sஅர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை Auraa cinemas நிறுவனத்திடமிருந்து வாங்கி வெளியிடுகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம்.

அர்னால்ட் நடித்துள்ள  டெர்மினேட்டர் ஜெனிசிஸ் திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை தென்னிந்தியா முழுதும் வெளியிடும் மகேஷ் கோவிந்த ராஜின் Auraa cinemas நிறுவனத்திடமிருந்து தமிழக விநியோக உரிமையை வாங்கியுள்ளது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம்.

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதைப் பற்றி குறிப்பிடுகையில் “ ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. ‘He is back’ என்ற டெர்மினேட்டர் வசனத்தைக் கூறி ” மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்.