Sony LIV-ன் மலையாள Original தொடரான ‘EYES’ காதல் மற்றும் அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசுகின்றது,அக்டோபர் 9 முதல்..
Love, Control, Obsession, Madness, அவள் வாழ்க்கையை அவன் கவனிக்கும்போது, அவனை யார் கவனின்கிறார்கள்?
காதல் எப்படி மெல்ல கட்டுப்பாடாகவும், பயமாகவும் மாறுகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள Sony LIV-ன் புதிய மலையாள Original தொடரான ‘EYES’, அக்டோபர் 9 முதல் Sony LIV-ல் வெளியாகின்றது.
‘EYES’ தொடரின் மையக் கதாபாத்திரம் காவல்துறை அதிகாரியான டினா செபாஸ்டியன், இவரது கதாபாத்திரத்தில் கனி குஸ்ருதி நடித்துள்ளார்.
காதல், அதீத ஈடுபாடு மற்றும் கட்டுப்பாடு எல்லை மீறும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை டினா விசாரிக்கத் தொடங்குகின்றார்.விசாரணை நகர நகர, காதலுக்கும் ஆபத்துக்கும் இடையிலான எல்லைகள் மங்குகின்றன. பயம், பாதுகாப்பின்மை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் டினாவின் முன் வருகின்றன,ஆனால், உண்மையை நெருங்க நெருங்க, டினா கண்டுபிடிக்கும் விஷயங்கள் அவர் எதிர்பார்த்ததைவிட மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கின்றது. 
இந்தத் தொடர் குறித்து இயக்குநர் மனு அசோகன் கூறுகையில்,
“EYES என்பது நான் நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்ல விரும்பிய ஒரு கதையாகும். ஒருவரை பின்தொடர்வது என்பது வெறும் குற்றம் மட்டுமல்ல அது ஒருவரின் பாதுகாப்பு மற்றும் மனநிலையையே ஆழமாக பாதிக்கக்கூடியதாகும்..,
அந்த உண்மையை சுவாரஸ்யமான த்ரில்லர் வடிவில் சொல்ல முயற்சித்திருக்கின்றோம்..இ ந்தக் கதையை சிறப்பாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கின்றேன்.
Sony LIV பார்வையாளர்கள் இந்தத் தொடருடன் இணைவார்கள் என்றும் இந்த விஷயத்தை வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்குவார்கள் என்றும் நம்புகிறேன்,”என்றார்.
மனு அசோகன் இயக்கியுள்ள இந்தத் தொடருக்கு பாபி–சஞ்சய் எழுத்தும்,அஞ்சனா நாயர் கதையை உருவாக்கியுள்ளார்.
Uyare மற்றும் Kaanekkaane படங்களுக்குப் பிறகு, மனு அசோகன் – பாபி–சஞ்சய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படைப்பு இது.
DreamKatcher தயாரித்துள்ள இந்தத் தொடரில் நிகிலா விமல், தேவ் மோகன், சானியா ஐயப்பன் மற்றும் ஸ்ருதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.
‘EYES’ – அக்டோபர் 9, வெள்ளிக்கிழமை முதல் Sony LIV-ல் மட்டும்.


