சமூக வலை தளங்களில் புயலாகப் பரவும் குறும்படம் “என்னங்க சார் உங்க சட்டம்”

rahulthatha1வயதான விவசாயி ஒருவர் அவசரத் தேவைக்காக ஏ.டி.எமில் பணம் எடுக்கச் செல்கிறார். அவர் பணம் எடுக்க முற்படுகையில் ஏ.டி.எமில் ஏற்பட்ட கோளாறால் பணம் மாட்டிக் கொள்கிறது. அதன் பின் அப்பணத்தை எடுக்க அவர் படும் இன்னல்களே “என்னங்க சார் உங்க சட்டம்”.

 

மூன்று நிமிடங்களே ஓடக்கூடிய இந்த குறும்படம் வெளியான நாள்முதல் சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் ஆகிய தளங்களில் வேகமாக பரவத் தொடங்கி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

வயதான விவசாயியாக “நானும் ரவுடிதான் புகழ் – ராகுல் தாத்தா” உதயபானு நடித்துள்ளார்.

 

இந்த குறும்படத்தை பிரபு ஜெயராம் இயக்கியுள்ளார்.  இவர் இயக்கியுள்ள மூன்றாவது குறும்படம் இது. இவர் இதற்கு முன் இயக்கிய ‘ஆக்ஸிஜன்’ , ‘பத்த வைடா பரட்ட’ எனும் இரண்டு குறும்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துப் பாராட்டைப் பெற்றவை  என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube Link – https://www.youtube.com/watch?v=LFWYHkOJGw8