சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடத்தேர்வான 12 தமிழ்ப்படங்கள்!

CIFF2014ஒவ்வோராண்டும் சென்னையில் சர்வதேசதிரைப்படவிழா கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் தமிழ் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்தஆண்டும்வருகிறடிசம்பர்18ந்தேதி12வதுசென்னை சர்வதேச திரைப்படவிழா சென்னையில் தொடங்குகிறது.

8 நாட்கள் நடைபெறும் இந்தவிழாவில்  45 நாடுகளில்இருந்து 170 திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது. இதில்கேன்ஸ், பெர்லின், வெனிஸ் திரைப்படவிழாக்களில் விருதுபெற்ற படங்களும் அடங்கும். இந்தபடங்கள் சென்னையில் 8 இடங்களில் திரையிடப்படுகின்றன. உட்லண்ட்ஸ்காம்ப்ளக்ஸ், ஐநாக்ஸ், கேசினோதியேட்டர், ரஷியன்சென்டர்ஆப்சயின்ஸ்அண்ட்கல்ட்சர் ஆகியஇடங்களில்இப்படங்கள் திரையிடப் படஉள்ளன.

இந்த 170 படங்களில் 12 தமிழ்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அவை என்னதான்பேசுவதோ, மெட்ராஸ், பூவரசம்பீப்பீ, சதுரங்கவேட்டை, வெண்நிலாவீடு, சலீம், முண்டாசுப்பட்டி, கதைதிரைக்கதைவசனம்இயக்கம், சிகரம்தொடு, பண்ணையாரும் பத்மினியும், தெகிடி, குற்றம்கடிதல் ஆகிய படங்களாகும்.

இவ்விழா 25-ம்தேதிவரைநடைபெறவுள்ளது.cffi-pm2