சிம்ரன் ரிடர்ன்ஸ்: ‘கரையோரம் ‘ரசிகர்களுக்குப் புது அனுபவம்!

karai1கரையோரம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எல்.ஆனந்த, ராமலிங்கையா , ஸ்டுடியோ 9 சுரேஷ் களஞ்சியம், இயக்குநர் ஜெ.கே.எஸ் , நாயகன் கணேஷ் , நிகிஷா படேல், இனியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கரையோரம் படத்தை பற்றி இயக்குநர் ஜெ.கே.எஸ் பேசியபோது, ” இந்த ‘கரையோரம்’ திரைப்படம் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களை பயமுறுத்தும் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக இருக்கும். இந்த படத்தை நாங்கள் மிகப்பெரிய தொழில்நுட்ப குழுவை கொண்டு உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் நடிகை சிம்ரன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கரையோரம் சிம்ரனுக்கு நிச்சயம் மிகப்பெரிய திருப்புமுனை திரைப்படமாக அமையும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. அவருக்கு இது “கம் பேக் “ படமாக இருக்கும் என்று கூட சொல்லலாம். இந்த படத்தை நாங்கள் மூன்று மொழிகளில் உருவாக்கியுள்ளோம். அதே போல் இந்த படம் நாயகி நிகேஷா படேலுக்கு அவருடைய திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமையும். கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நிகிஷாவிடமிருந்து மிகச்சிறந்த நடிப்பை இந்த படத்துக்காக வெளிகொண்டுவந்துள்ளேன். இனியாவின் நடிப்பு இந்த படத்தில் நிச்சயம் பேசப்படும் அவர் இந்த படத்தில் முற்றிலும் புதுமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.. படத்தின் இடைவேளை பகுதி நிச்சயம் எல்லோரிடமும் மிகுந்த வரவேற்ப்பை பெறும் அதற்குக் காரணம் இதுவரை யாரும் தொடாத ஒரு விஷயத்தை நாங்கள் படத்தில் கையாண்டுள்ளோம் ‘”என்றார் இயக்குநர்.