‘பொன்னியின் செல்வன் ‘படத்தின் வெற்றி: சந்தோஷ சந்திப்பு!

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை முன்னிட்டு படக் குழுவினர் இன்று ஊடகங்களைச் சந்தித்து தமது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

இந்த விழா சென்னை தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் நடந்தது. விழாவில் லைகா நிறுவனத்தின் தலைவர் லைகா சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி ,ஜெயம் ரவி, பார்த்திபன், வைகா நிறுவனத்தின் ஜி கே எம் தமிழ்க் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.தங்களது மகிழ்ச்சியில் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள்.