மகேந்திரன் நடிக்கும் மண் சார்ந்த கதை ‘மருதாண்டசீமை’ !

Marudanda seemai stills (13)வரலாற்றுப் பின்னணியுடன் அல்ட்ரா மாடர்ன் வில்லேஜ் படமாக வளரும் படம்“மருதாண்டசீமை”.

A.ஜமால் சாகிப் அவர்கள் பெருமையுடன் வழங்கும்… மயில்த்தேவர் ஃபிலிம்ஸ் சார்பில் டாக்டர் K.C.பிரபாத் M.A., அவர்கள் பிரம்மாண்டமாக தயாரிக்கும் முதல் படம் “மருதாண்டசீமை”.
இப் படத்தை “வெண்ணிலாவீடு” படத்தின் இயக்குநர் வெற்றிமகாலிங்கம் இயக்குகிறார். சர்ச்சைக்குரிய தலைப்பாக இருப்பதன் காரணமாக ‘அடித்துக் கேட்டாலும் கதையை கூறமாட்டேன்’ என்று சொல்லும் இயக்குநர்… என்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் படமாக இருக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறார்.

“மருதாண்டசீமை” படத்தில் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்க… பல்லவி ஜோடி சேர்கிறார்… இன்னொரு நாயகனாக “தைரியம்” குமரன் நடிக்க… இவருக்கு ஜோடியாக முன்னனனி கதாநாயகி நடிக்கிறார்… இவர்களுடன் விஜய் டீவி புகழ் அமுதவாணன் “தார தப்பட்டை” படத்திற்கு பிறகு காமெடி நாயகனாக கை கோர்க்கிறார்… மேலும் சுப்பு பஞ்சு, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நிரோஷா, “பாயும்புலி” சாமிநாதன், சம்பத்ராம், “சூதுகவ்வும்” ராதா அவர்களுடன் பாடகர் வேல்முருகன், ‘கும்புடுறேன் சாமி’ ராமராஜ், மொக்க ராசு, சிசர் மனோகர், ஹலோ கந்தசாமி போன்ற பிரபலங்களும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் “K.C.பிரபாத்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்…
“மருதாண்டசீமை” படத்தின் இசையை நவீன்ஷங்கர் அமைத்திருக்கிறார். இவர் அறிமுகம் என்றாலும் ஆண்ட்ரியா, வேல்முருகன், ஆண்டனிதாசன், இசையமைப்பாளர் தேவா, ஹரிசரன் போன்ற பிரபலங்களை பாடவைத்துள்ளார். மேலும் முன்னணி இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக வருவார் என்று பாடல் கேட்டவர்கள் புகழாரம் சூட்டுவது குறிப்பிடத்தக்கது.
“மருதாண்டசீமை” படத்தின் பாடல்களை ஞானகரவேல், மணியமுதவன், செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
“மருதாண்டசீமை” படத்தின் ஒளிப்பதிவு சேவிலோராஜா D.F.Tech., இவர் எம்டன்மகன், திமிரு – 2 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தொகுப்பு – ராம்சுதர்ஷன், கலை – A.R.மோகன், தயாரிப்பு வடிவம் –  M.ஜெயக்குமார்.  பிருந்தா, அசோக் ராஜ், பாபி ஆண்டனி ஆகியோர் நடனம் அமைத்துள்ளார்கள்.
“மருதாண்டசீமை” படத்தின் இரண்டு பாடல்கள் வெளிநாட்டில் படமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
“மருதாண்டசீமை”படத்தை  முழுவீச்சில் தயாரித்து  விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.