ரஜினியைச் சந்தித்த தாய்லாந்து பிரதமர் !

rajini1தாய்லாந்து பிரதமர் ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்தைச் சந்தித்து நலம் விசாரித்தார். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினியின் “ கபாலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கும் போது அப்படப்பிடிப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு மிகப்பெரிய அளவில் உதவி புரிந்தார்.

அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர்  ரஜினியைச் சந்திப்பதற்காகவே தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் ரஜினிக்கு அங்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதாகவும் அவர் அங்கு பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளதாகவும் கூறினார். இச்சந்திப்பின் போது “ வி கிரியேஷன்ஸ் “ CEO  பரந்தாமன் தாணு உடனிருந்தார்.