ராமராஜன் நடிக்கும் புதிய படம் ‘சாமானியன் ‘!

ஒரு காலத்தில் மக்கள் நாயகன் என்று அன்போடு அழைக்கப்பட்டு ஏராளமான வெற்றி படங்களைக் கொடுத்தவர்,எளிய மக்களுக்கு எளிய மக்களின் இதயங்களில்நிறைந்தவர் நடிகர் ராமராஜன். இடையில் சில காலம் அவருக்குப் பின்னடைவு ஏற்பட்டது.

மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிக்க வந்திருக்கிறார்.

சாமானியன் என்ற பெயரில் அவர் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப்படம் அவருக்கு 45 வது படம்.

இப்படத்தை எழுதி இயக்குபவர் ஆர் ராகேஷ்.ராமராஜுடன் ராமராஜனுடன் ராதாரவி ,எம். எஸ். பாஸ்கர் போன்ற முன்னணி முகங்களும் நடிக்கிறார்கள்.இப்படத்தை எக்ஸ்டரா என்டர்டைன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சி. அருள்செல்வன், இசை அச்சு ராஜா மணி ,கதை கார்த்திக் குமார், எடிட்டர்- ராம் கோபி, பாடல்கள் சினேகன்,ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்.

இப்படத்தின் அறிமுக விழா இன்று கிருஷ்ணவேணி திரையரங்கில் நடைபெற்றது.