வாஸ்துவை நம்பும் சிபிராஜுக்கு ‘கட்டப்பாவ காணோம்’ படம் நம்பிக்கை தருமா?

sibi1சில திரைப்படங்களுக்கு மட்டும் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தனித்துவம்  இருக்கும். அப்படி ஒரு திரைப்படமாக உருவெடுத்து இருப்பது தான் சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’.

இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநரான  மணி சேயோன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை ‘விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். சந்தோஷ் தயாநிதியின் இசையில் உதயமாகி இருக்கும் ‘கடப்பாவ காணோம்’  பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
kattappa1“கட்டப்பா’ என்னும் வாஸ்து மீன்  தொடர்ந்து எங்களுக்கு நல்ல செய்தியை பெற்று தந்து கொண்டிருக்கிறது…கட்டப்பாவ காணோம் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகிய இரண்டும் ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பை பெற்று வருவதை பார்க்கும் பொழுது, எங்களுக்கு   மகிழ்ச்சியாக இருக்கிறது…. அதேபோல் ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படமும் அவர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் முழுவதுமாக பூர்த்தி செய்யும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சிபிராஜ்.