விக்கி – நிக்கி -பக்கா!

vikramprabu1 விக்ரம்பிரபு  நடிக்கும் அடுத்த படம்  ‘ பக்கா’. கதாநாயகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார்  தயாரிக்கிறார்.
விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.nikki

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  எஸ்.எஸ்.சூர்யா

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது ,

”நான் இயக்குநர் பேரரசுவுடன் உதவியாளராகப் பணியாற்றினேன். பக்கா படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் இது பக்கா கமர்ஷியல், ஜாலியான படம். கிராமத்துக் கதையான இது, முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை கலகலப்பான காமெடி இருக்கும். படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 1ம் தேதி தென்காசியில் துவங்குகிறது. துவங்குகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு 20 நாட்கள் குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது என்றார்.