விக்ரம் பிரபுவின் ‘அசுரகுரு’. மார்ச் 13 -ல்!

அன்னை இல்லத்தின் அன்பு வாரிசாக நடிகர்திலகத்தின் குடும்பத்தின் புகழ் பேசும் நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் விக்ரம் பிரபு .அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘அசுரகுரு’. எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் ஜே.எஸ்.பி. சதீஷ் வழங்கும் இப்படம் மார்ச் 13 -ல் வெளியாகிறது.

அசுர குருவில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க நாயகியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். யோகிபாபு, மனோபாலா, ஜெகன், இளங்கோ குமரவேல், சுப்புராஜ் .நாகிநீடு ஆகியோரும் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு எஸ். ராமலிங்கம் .இசை- கணேஷ் ராகவேந்திரா. இயக்கம் : ஏ ராஜ்தீப்.
‘அசுரகுரு படத்தின் கதை என்ன?

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் உள்ளது. சிலருக்குப்புகழின் மீது தேடல். சிலருக்கு அதிகாரத்தின் மீது என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆனால் சக்தியின் தேடல் என்பது பணம். ஆமாம் பணம் மட்டும் தான். ஏன் இந்த தேடல் ?எதற்காக இந்த தேடல் என்பதுதான் அசுரகுரு கதை.
விரைவில் திரைகளில்.