விநாயகர் சதுர்த்தி அன்று இசைஞானி இளையராஜா கலந்து கொண்ட திரைப்பட தொடக்க விழா!

இசைஞானி இளையராஜாவின் ஸ்டுடியோவில் விநாயகர் சதுர்த்தி அன்று அதாவது இன்று ’இராவணன் சோலையில் சிவன்மலை’ என்கிற புதிய படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் படத்திற்கு இசையமைக்கும்  இளையராஜா கலந்து கொண்டார். இந்தப் படத்தை பாணர் இயக்குகிறார் .ஆர் எஸ் குளோபல் டாக்கீஸ் சார்பில் எஸ் கே ஸ்ரீதர் தயாரிக்கிறார் .இப்படத்தின் நாயகனாக நந்து,நாயகியாக ஆராதனா பட்  நடிக்க பிற பாத்திரங்களில் தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு -எம்.வி. பன்னீர்செல்வம், படத் தொகுப்பு -காசி விஸ்வநாதன், சண்டைப் பயிற்சி -மைக்கேல் எனப் படக் குழுவினர் இணைந்துள்ளனர்.

இளையராஜாவின் ஸ்டுடியோவில்  நடந்த இந்தத் திரைப்பட விழாவில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பூஜையைத் தொடங்கி வைத்தார். விழாவில்  கங்கை அமரன்,  இயக்குநர் ஞான ராஜசேகரன்,படத்தின் இயக்குநர் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர், படத்தின்  நாயகன் நந்து ,நாயகி ஆராதனா பட், பிரபல நடிகர்கள் தலைவாசல் விஜய் , கஞ்சா கருப்பு ,முத்துக்காளை  மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர் .தென்னகத்தில் பல மலைப்பகுதிகளில் படமாகும் இப்படத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல நடிகர்கள், நடிகைகள் நடிக்கின்றனர்.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், இயற்கை எழில்கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் முதற்கட்டமாகப் படப்பிடிப்பு தொடங்குகிறது.