தோனி வெளியிடும் ஹரிஷ் கல்யான் நடித்த ‘எல்ஜிஎம்’ டீஸர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனான தோனி மீது தமிழக மக்களுக்குத் தனி அன்பு உண்டு. ஐபிஎல்லில் நிறைய கோப்பைகளை குவித்திருப்பதால் பலருக்கும் தோனி மீது அபிமானம் உண்டு.

அப்படிப்பட்ட கிரிக்கெட் வீரரான தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.இப்படங்களின் தயாரிப்பு எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட படமாக இருக்கும்? என்று ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு அலையடித்து வருகிறது

இப்படி பல வகையிலும் எதிர்பார்ப்புகள் நிறைந்துள்ள நிலையில் அறிமுக இயக்குநர் ரமேஷ் உருவாக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – இவானா ஜோடியாக நடிக்கும் ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) என்ற படம் தமிழில் தயாராகிறது.சமகால கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்துக் கதை உருவாகியுள்ளது என்று எண்ணத் தோன்றுகிறது.

படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். கேரளாவைச் சேர்ந்த விஸ்வஜித் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று அண்மையில்முடிவடைந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை இன்று அதாவது ஜூன்7 ஆம் தேதி தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி இணைந்து வெளியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.தோனி அணி ரன்களைக் குறிப்பது போல் டீசரும் பார்வைகளைக் குவிக்கும் என்று நம்பலாம்.