வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் 22 வயது இளைஞர் தயாரிக்கும் படம்!

வைரமுத்துவின் வகை வகையான பாடல்களுடன் உருவாகியுள்ள படம்  ‘அவளுக்கென்ன அழகிய  முகம்’.
எம்.எஸ். கதிரவன் என்கிற  22 வயது  இளைஞர்  தயாரிக்கிறார்.பொறியியல் கல்லூரி மாணவர் இவர்.

இப் படத்தை இயக்குபவர் ஏ.கேசவன்.இது இவரது முதல் படம்.
காதலில் வெவ்வேறு காரணங்களால் தோல்வி அடைந்த மூன்று பேர் தங்களுடன் வந்து சேர்ந்த நான்காவது நண்பனின் காதலை எப்படி வெற்றி பெற வைக்கிறார்கள் என்பதுதான் கதை.vairamuthu-new

இது காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான படம்.

நடிப்பவர்கள் பலரும் புதியவர்கள்.

கதைக்களம் கோவை என்றாலும் மதுரைக்குக் கதை பயணிக்கிறது.
கோவை,மதுரை தவிர கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி, கேரளா ஆலப்புழா போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

படத்தில் 5 பாடல்கள். எல்லாவற்றையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். ஐந்தும் வெவ்வேறு நிறம் வெவ்வேறு தளம் என்று சொல்லும்படி இருக்கும். நட்பு, காதல்,பயணம், தோல்வி, தாய்ப்பாசம் இப்படி பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைப்பேசும்.

படத்துக்கு ஒளிப்பதிவு நவநீதன். இசை டேவிட் ஷார்ன். இவர் மலையாளம், இந்தியில் ஆல்பங்கள் இசையமைத்தவர். படத்தொகுப்பு. கோபிகிருஷ்ணா, நடனம்: ஷங்கர், ஸ்டண்ட்: எஸ்.ஆர்.முகேஷ், கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி.

கதிரவன் ஸ்டுடியோஸ் சார்பில்  எம்.எஸ். கதிரவன்  தயாரிக்கும் ‘அவளுக்கென்ன அழகிய முகம்’  இறுதிக் கட்டப் பணிகளில் மும்முரமாக மெருகேறி வருகிறது.