ஷபீர் சுல்தான் – சின்மயி இணைந்த ‘வான்மதி’ பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது!

பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ஷபீர் சுல்தான் மற்றும் பிரபல பின்னணி பாடகி சின்மயி இணைந்து உருவாக்கியுள்ள புதிய Independent தமிழ் பாடல் ‘வான்மதி’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் கவிதை மற்றும் இனிமையான மெலடியுடன் R&B, ஹிப்-ஹாப் மற்றும் இந்திய பாரம்பரிய இசையின் கலவையில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.

ஷபீர் மியூசிக் ஏசியா இசை நிறுவனத்தின் சார்பில் செப்டம்பர் 11, 2026 அன்று உலகம் முழுவதும் ‘வான்மதி’ பாடல் வெளியானது.

பாடலின் விளம்பர நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செப்டம்பர் 12 அன்று சென்னை AMPA SKYONE மாலில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பாடல் குழுவினர் ரசிகர்களை சந்தித்து, பாடல் வெளியீட்டை கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள், ‘வான்மதி’ பாடலின் வித்தியாசமான இசை அமைப்பு மற்றும் ஷபீர் சுல்தான் – Chinmayi sripaada-வின் கூட்டணிக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.

காதலை மையமாகக் கொண்ட ‘வான்மதி’

‘வான்மதி’ பாடலின் மையக் கருத்து மிகவும் எளிமையானது — காதலில் விழாமல் இருக்க மனதால் முடியுமா?
சூரியன் உதிக்காமல் இருக்க முடியுமா? நிழல் நம்மைத் தொடராமல் இருக்க முடியுமா?
மலர் மலராமல் இருக்க முடியுமா? இப்படி இயற்கையை மையமாகக் கொண்ட கேள்விகளுடன் பாடல் தொடங்குகிறது.

இறுதியில்,இதயம் காதலில் விழாமல் இருக்க முடியுமா? என்ற கேள்விக்கு வருகிறது. இதுவே பாடலின் முக்கியமான இசை திருப்பமாக அமைந்து உள்ளது.

தமிழ் மெலடி மற்றும் கவிதையுடன் தொடங்கும் பாடல், அதன் பின்னர் ஹிப்-ஹாப் மற்றும் R&B இசையுடன் இணைகிறது. அதனோடு நவீன சின்தசைசர் இசையும் இந்திய பாரம்பரிய இசைத் தாக்கங்களும் இடம்பெற்றுள்ளது.

ராகம் கரஹரப்ரியா மற்றும் சுத்த தன்யாசி ஆகியவற்றின் தாக்கத்துடன் அமைந்துள்ள செமி-கிளாசிக்கல் பகுதியும் பாடலில் இடம்பெற்றுள்ளது.

‘வான்மதி’ பாடல் ஷபீர் சுல்தான் மற்றும் சின்மயி இணையும் முக்கியமான Independent இசைப் படைப்பாக அமைந்துள்ளது.

இந்தப் பாடலுக்கு ஷபீர் சுல்தான் வரிகள் எழுதி, இசையமைத்துள்ளார். அபின் பால் மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் பணிகளை செய்துள்ளார்.முன்னதாக ‘Must Date the Playboy’ படைப்பில் இணைந்து பணியாற்றிய ஷபீர் சுல்தான், முசம்மில் எலியாஸ் மற்றும் Chandni நாகதுர்கா மீண்டும் இந்தப் பாடல் மூலம் இணைந்துள்ளனர்.

‘வான்மதி’ இசை வீடியோவை முசம்மில் எலியாஸ் இயக்கியுள்ளார். இதில் முசம்மில் எலியாஸ் மற்றும் சந்த்னி நாகதுர்கா நடித்துள்ளனர்..