8 ஆம் ஆண்டில் லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் !

lawrence44லாரன்ஸின் ஸ்ரீ ராகவேந்திரர் கோவில் 8 –ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது   !    

 கோடி கோடியாக சம்பளம் வாங்கினாலும்  எச்சில் கையால் காக்கை ஓட்டாத நடிகர்கள் உள்ள இதே கோடம்பாக்கத்தில்தான் உதவுகிற மனமும் கொடைக்குணமும் உள்ள நடிகரும், இயக்குநருமான ராகவாலாரன்ஸ் இருக்கிறார்.

அவர் அம்பத்தூரில் ஸ்ரீராகவேந்திரர் கோவில் கட்டிப் பராமரித்து வருவது அனைவரும் அறிந்ததே.  பொதுமக்களிடையே  அந்தக் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது.

வருகிற ஜனவரி 1ம் தேதி புத்தாண்டன்று கோவில் கட்டி 8 ஆண்டுகள்  ஆகிறது. புத்தாண்டன்று லாரன்ஸ் தனது டிரஸ்ட் குழந்தைகளுடன் புத்தாண்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் கொண்டாட இருக்கிறார். கோவிலில் சிறப்பு, யாக பூஜைகள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்க உள்ளார் ராகவா லாரன்ஸ்.