பிரபல தொலைக்காட்சி பிரபலமும் பிக்பாஸ் புகழ் முகமுமான பிரதீப் ஆண்டனிக்கும் பூஜா சக்திக்கும் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
இரு மதம் இணைந்த இந்த இணை,மத நல்லிணக்கத்தை மதிக்கும் வகையில் பாரம்பரிய இந்து மற்றும் கிறிஸ்தவ நடைமுறை சம்பிரதாயங்களைப் பின்பற்றி திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர்.இதன் மூலம் தங்கள் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர், இது அன்பான தொலைக்காட்சி நட்சத்திரத்திற்கும் அவரது இல்லத்தரசியாக மாறிவிட்ட மணமகளுக்கும் ஓர் அழகான தொடக்கத்தை அளித்துள்ளது.
மணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!