ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து!

இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருதைக் கவிப்பேரரசு வைரமுத்து இன்று மாலை டில்லியில் நடந்த விழாவில் பெற்றுக்கொண்டார்.இன்று அவரது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.டில்லியில் நடந்த விழாவில் டாக்டர் கரண்சிங் இந்த விருதை வைரமுத்துவுக்கு வழங்கினார்.கவிஞருக்கு அன்பான வாழ்த்துகள்!

தமிழ் மொழிக்கு 3வது ஞானபீட விருது வருவதற்கு 23 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.ஞானபீட விருது தொடங்கப்பட்டு 11வது விருதாக அகிலன் பெற்றார் ; 38 வது விருதாக ஜெயகாந்தன் பெற்றார்.60-வது விருதாக வைரமுத்து பெற்றிருக்கிறார். ஏற்புரை ஆற்றிய கவிஞர் வைரமுத்து, ’உலக அளவில் நோபல் பரிசானது இந்தியக் கவி ஒருவருக்கு வழங்கப்பட்டு 113 ஆண்டுகள் ஆகிவிட்டன. உலக அழகிகளைத் தயாரித்த இந்தியா உலகக் கவிகளைத் தயாரிக்க வில்லையா?’ என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ’இலக்கியத்துக்காக தனி பல்கலைக் கழகம் அமைக்கப்பட வேண்டும் ’எனவும் கோரிக்கை வைத்தார்.   

 

நேற்று டில்லி சென்ற கவிஞருக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் வரவேற்பு விழா எடுத்தது குறிப்பிடத்தக்கது .

ஞானபீட விருது பற்றி!

ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருது ஆகும் .இந்தியாவின் முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திரபிரசாத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழில் முனைவோரிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம்..

இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954-இல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின் என்பவர்.

இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன சரசுவதி சிலையை உள்ளடக்கியது. 1961-இல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965-இல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குறுப்பிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார்.

1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகபட்சமாக, இந்தி மொழி எழுத்தாளர்கள் பதினொரு முறை இவ்விருதைப் பெற்றுள்ளனர்.

2015-ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தி மொழிக்கு இதுவரை பதினொரு முறையும், கன்னட மொழிக்கு எட்டு முறையும், வங்க மொழிக்கு இதுவரை 6 முறையும், மலையாளத்திற்கு 6 முறையும், குஜராத்தி,  மராத்தி, ஒடியா, உருது போன்ற மொழிகளுக்கு தலா நான்கு முறையும், தெலுங்கிற்கு மூன்று முறையும், அசாமியா, பஞ்சாபி, மற்றும் தமிழ் போன்ற மொழிகளுக்கு இரண்டு முறையும், காஷ்மீரி, கொங்கணி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கு ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். ஆஷா பூர்ணாதேவி இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார். 1965-ஆம் ஆண்டில் புரோதம் புரோதிசுருதி (பொருள்: முதல் சத்தியம்) எனும் வங்காளப் புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.