ஹாரர் படங்களில் புதுமையாக  உருவாகும் ‘வெற்றிமாறன்’…!

  லுலு கிரியேஷன்ஸ் சார்பில் எம். எஸ்.சுல்பிகர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெற்றிமாறன்’.. அபிசரவணன்  கதாநாயகனாக  நடித்துள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக புதுமுகம் வினோலியா அறிமுகமாகிறார். மனோ என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.   தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜெயமணி …

ஹாரர் படங்களில் புதுமையாக  உருவாகும் ‘வெற்றிமாறன்’…! Read More

தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும்’அபியும் அனுவும்’

சரிகம வழங்கும் யூட்லி ஃபிலிம்ஸ் தயாரித்திருக்கும் படம் ‘அபியும் அனுவும்’. தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் டொவினோ தாமஸ், பியா பாஜ்பாய், பிரபு, சுஹாசினி, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தரண் இசையமைத்திருக்கும் இந்த படத்தை பி ஆர் …

தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி இருக்கும்’அபியும் அனுவும்’ Read More

மீண்டும்  “நீயா2”  ஜெய்  ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –  கேத்ரின்  தெரேசா!

கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம்.  “நீயா“ இன்று வரை ஹிட்டான ஹாரர் மூவி படங்களுக்கு “நீயா” ஒரு முன் உதாரணம் என்று சொல்லலாம். மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் …

மீண்டும்  “நீயா2”  ஜெய்  ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி –  கேத்ரின்  தெரேசா! Read More

அமலாபாலின் தொண்டு நிறுவனம்!

பெரும்பாலான இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் சினிமா நட்சத்திரங்களுக்கு நடிப்பது மட்டுமில்லாமல் இந்த இளைஞர்களை வழிப்படுத்தும் பொறுப்பும் உள்ளது. திரையை தாண்டி அவர்களது பொறுப்பு நீள்கிறது என்பதை நடிகை அமலா பால் தற்பொழுது நிரூபித்துள்ளார். கஷ்டப்படும் மக்களுக்கு சேவை செய்வதில் என்றுமே ஆர்வம் …

அமலாபாலின் தொண்டு நிறுவனம்! Read More

பா. இரஞ்சித் வழங்கும் ‘பரியேறும் பெருமாள்’

இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் “பரியேறும்பெருமாள்.  இயக்குநர்  ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் “மறக்கவேநினைக்கிறேன்”தொடரின்  மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக  அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”. முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென்தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிகஅருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும் வாழ்வியலையும் அதனைச் சுற்றிநடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் இருக்கும்.  பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்க அவருடன் கயல் ஆனந்தி, யோகிபாபு,லிஜீஷ், மாரிமுத்து தவிர திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்களையே பெரும்பான்மையான கதாபாத்திரங்களில்நடிக்க வைத்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விவேக் மற்றும் மாரி செல்வராஜ் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.ஸ்ரீதர் ஒளிப்பதிவாளராகவும், ஆர்.கே.செல்வா எடிட்டராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். சான்டி நடனம் அமைக்க, சண்டைப்பயிற்சியை ஸ்டன்னர் சாம் அமைத்திருக்கிறார்.  சி.வேலன் மற்றும் ஆர்.ராகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். நிர்வாகத் தயாரிப்பு லிஜீஷ். …

பா. இரஞ்சித் வழங்கும் ‘பரியேறும் பெருமாள்’ Read More

தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது “தடம்”

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “குற்றம் 23” திரைப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக தயாரித்த தயாரிப்பாளர் இந்தர் குமார் தற்போது “தடம்” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை …

தமிழ் புத்தாண்டில் தடம்பதிக்கிறது “தடம்” Read More

வெற்றிக்கூட்டணி  சத்யராஜ் – ஷிவ்ராஜ் இணையும் புதிய படம்!

2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது.  “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி பெரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்.  இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ்  ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல்நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”.  தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. சுந்தரிபிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் வெற்றிக்கூட்டணி முதன்முறையாக ஹிந்தியில் தடம்பதிப்பது குறிப்பிடத்தக்கது  இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்புகூறியுள்ளது. 

வெற்றிக்கூட்டணி  சத்யராஜ் – ஷிவ்ராஜ் இணையும் புதிய படம்! Read More

மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.: கமல்வேண்டுகோள்!

   சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் 2018 (Instincts 2018) என்னும் கலை நிகழ்ச்சி மார்ச் 8,9,10 ஆகிய மூன்று  நாட்களுக்கு நடக்கிறது. அதன் முதல் நாள் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி …

மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.: கமல்வேண்டுகோள்! Read More

தமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்!

   பல ஆண்டுகளாக இழுத்து வந்த காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் ‘ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் சரியான …

தமிழக விவசாயிகள் பற்றிய ஆவணப்படத்துக்கு டெல்லி முதல்வர் தந்த அங்கீகாரம்! Read More

வெற்றிமாறன் வெளியிடும் ‘மிக மிக அவசரம்’

அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் …

வெற்றிமாறன் வெளியிடும் ‘மிக மிக அவசரம்’ Read More