சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ – ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்!

‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒரு பக்க கதை’ ‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா” உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.  இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முன்னணி இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.  மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.  சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை  உணர்ந்துகொள்ள முடியும். இந்த கதை பார்வையாளர்களுடன் உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.’ என்றார் தம்பி இராமையா அவர்கள், ‘இந்த கதை அனைத்து மக்களையும் இணைக்கிறது. பார்வையாளர்கள் ஒரு தத்துவ நாவலை முடிப்பது போல் உணர்வார்கள், மிகவும் விரும்புவார்கள்’ என்றார். முனிஸ்காந்த் அவர்கள் கூறுகையில், ‘சமுத்திரகனி இயக்கத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. முண்டாசுப்பட்டி, பசங்க 2, மாநகரம், மரகதநாணயம் படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்று தரும்’ என்றார்.  சஞ்சிதா ஷெட்டி அவர்கள், ‘அனைத்து பெற்றோர்களும் குழந்தைகளும் இந்த படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக இருக்கும்.  இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்”.  தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் அவர்கள், ‘”தன்னால் மட்டுமே தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும், தான் இல்லையென்றால் தனது குடும்பத்தின் நிலை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும்  தகுந்த பதிலை கூறும் படமே ‘விநோதய சித்தம்’. இந்த படத்தின் மூலம் ஜீ5 உடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார். ஜீ5 ஒரிஜினல் படமான ‘விநோதய சித்தம்’ அக்டோபர் 13  அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’ – ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்! Read More

சமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.   மீண்டும் சமுத்திரகனி – M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து …

சமுத்திரகனி – சசிகுமார் மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’ Read More

‘தொண்டன்’ விமர்சனம்

நம்மைவிட்டு வேகமாகப் பறந்து போகும் ஆம்புலன்ஸ் டிரைவர் பற்றி நாம் நினைத்துப்பார்த்துண்டா? அவர்களை நினைத்து  , அவர்களின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து எடுத்திருக்கிறார்.அதுதான் ‘தொண்டன்’ . நாட்டு நடப்பு பற்றி கோபம் கொள்ளும் இளைஞன் பாத்திரம் என்றால் சமுத்திரக்கனிக்கு அல்வா சாப்பிடுவது …

‘தொண்டன்’ விமர்சனம் Read More

காமராஜ் படத்தை நிச்சயமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ- எம்.பியும் கட்டாயம் பார்க்க வேண்டும் :காந்தியின் செயலாளர் கல்யாணம்

காமராஜ் படத்தின் டீசரை வெயிட்டு பேசிய மகாத்மா காந்தியின் செயலாளர் கல்யாணம்…இந்த படத்தை நிச்சயமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ- எம்.பியும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றார். அவர் பேசும் போது”காமராஜர் மாதிரி ஒவ்வொரு அரசியல் வாதியும் இருந்தால் இந்த நாடு எப்பொழுதோ முன்னேறி …

காமராஜ் படத்தை நிச்சயமாக ஒவ்வொரு எம்.எல்.ஏ- எம்.பியும் கட்டாயம் பார்க்க வேண்டும் :காந்தியின் செயலாளர் கல்யாணம் Read More