ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சாய் பாதானந்தா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலில் பத்திரிகையாளர்களுக்காக படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் தியாகராஜன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
‘சாய் பாதானந்தா’ திரைப்படம் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கைச் சரிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1906-ம் ஆண்டு திருச்சி அருகே உள்ள பொய்யாமணியில் பிறந்த ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி, தெய்வத்தைத் தேடி அலைந்து, இறுதியில் தன்னுடைய வாழ்க்கையையே ஆன்மிகப் பணிக்கும் மனித சேவைக்கும் அர்ப்பணித்தவர். ‘பொய்யாமணி செல்வர்’ எனப் போற்றப்பட்ட அவர், ஷீரடி சாய் பாபாவின் மீது கொண்ட பக்தியுடன் அவரது வழியில் ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டார்.
பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டரின் Founder – Patron ஆகவும், மதராஸ் அகில இந்திய சாய் சமாஜத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி, நிபந்தனையற்ற அன்பைப் போதித்ததோடு, அதைத் தனது வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழ்ந்தவர். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி பெங்களூருவில் மகா சமாதி அடைந்தார்.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் ஆன்மிகப் பயணத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கிய ஆவணப் படைப்பாக ‘சாய் பாதானந்தா’ உருவாகியுள்ளது. ஒரு சிறந்த சாய் பக்தரின் வாழ்க்கை வரலாற்றையும், ஒரு மகானின் எளிமையான வாழ்க்கையையும் உலகுக்கு அறிமுகப்படுத்தி, அதை வரலாற்றுப் பதிவாக மாற்ற வேண்டும் என்ற ஆன்மிக நோக்கத்துடன் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வியாபார நோக்கம் எதுவும் இல்லாமல், ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி டிரஸ்ட் சார்பில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி பிறந்த பொய்யாமணியில், பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டர் மூலமாகக் கட்டப்பட்டுள்ள ஷீரடி சாய் பாபா மந்திரிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அதேபோல், பெங்களூரு தியாகராஜ நகரில் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி நிறுவிய சாய் ஸ்பிரிச்சுவல் சென்டர் மற்றும் சாய் பாபா ஆலயம், ஷீரடி சாய் பாபா ஆலயம் உள்ளிட்ட புனிதத் தலங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் புனிதத் தலங்களை நேரில் தரிசிக்கும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆழமான வசனங்கள், தெய்வீகமான பாடல்கள், மனதை வருடும் இசை, யதார்த்தமான நடிப்பு, கண்கவர் ஒளிப்பதிவு மற்றும் கச்சிதமான படத்தொகுப்பு என கலை நயத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன ஏ.ஐ. தொழில்நுட்பம் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவற்றையும் பயன்படுத்தி சில காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் திரை ஆக்கத்திற்கு வழிகாட்ட, பி. நித்தியானந்தம் இப்படத்தை இயக்கியுள்ளார். அருண் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். அபிஷேக் ராஜு இசையமைத்துள்ளார். சுபாஷ் பகவதியப்பன் படத்தொகுப்பு செய்துள்ளார். பி. நந்த குமார் கலை இயக்கத்தைக் கவனித்துள்ளார். என். மகேந்திரன் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், எஸ். மலர் கண்ணன் தயாரிப்பு நிர்வாகத்தையும் மேற்கொண்டுள்ளனர். வர்ணனையாளராக சாய் சௌமியா அபிஷேக் ராஜு பணியாற்றியுள்ளார். ஆனந்த மௌலி சுவாமிஜி, ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பழம்பெரும் ஆன்மிக நடிகர்களான ரமணி, தம்பி பார்த்தசாரதி, ரங்கமணி, ஜெயம் மணியன், சங்கர நாராயணன், ஸ்ரீதர், ஸ்ரீவத்சன், சாய் கோகுல்நாத், ரவிசங்கர், மாஸ்டர் தரணிதரன், மாஸ்டர் சாலுவேஷ், வருண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயந்தி, சாந்தி, ரேவதி, வர்ஷா, ஈஸ்வரி, கலா வரதன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ரசிகா அம்மன் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்நிகழ்வில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பேசியதாவது:
“முதலில் மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக கிருஷ்ணகுமார் சார் பற்றி சொல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக அவரை எனக்குத் தெரியும். அவரை நான் ஒரு குருவைப் போலத்தான் பார்க்கிறேன். அவரது தொழில் சார்ந்த விஷயங்களில் நானும் ஓரளவு தொடர்பில் இருப்பதால், அவர் எனக்கு பல நல்ல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். தனது குருவைப் பற்றி ஒரு பயோபிக் திரைப்படம் எடுப்பது சாதாரணமான விஷயம் அல்ல. பயோபிக் என்றாலே பல தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள். ஆனால் உண்மையான வாழ்க்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி என்பதால் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கிருஷ்ணகுமார் சார் இந்தப் படத்தை உருவாக்குவதற்காக இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்திருக்கிறார். அவர் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை எப்படியாவது செய்து முடிப்பது அவரது திறமை. அவரை நான் எனது குருவாகவே பார்க்கிறேன். அவரது தொழில் மற்றும் வாழ்க்கை சார்ந்து அவர் எனக்கு பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கிருஷ்ணகுமார் சாரும் நானும் திருச்சியுடன் தொடர்புடையவர்கள். அவருடைய குடும்பத்துக்கும் எனது குடும்பத்துக்கும் அந்த ஊருடன் தொடர்பு இருக்கிறது. அவர் கட்டியிருக்கும் கோயிலைப் பற்றி எனக்கு முன்பே தெரியாது. ஒரு முறை அவரை நான் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இருந்தபோதும் தொலைபேசியை எடுத்துப் பேசினார். அந்த அளவுக்கு தனது குருவின் மீது பக்தியுடன் இருப்பவர். அந்தக் கோயிலையும், தனது குருவின் வாழ்க்கையையும் உலக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
இதை வெறும் ஒரு சாதனையாக மட்டும் நான் பார்க்கவில்லை. தனக்காக எதையும் செய்யாமல், தனது குருவுக்காக அவரது வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். மக்கள் அவரது குருவின் வாழ்க்கையை அறிந்து, அதிலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். இப்படிப்பட்ட ஒரு முயற்சியை மேற்கொண்ட கிருஷ்ணகுமார் சாருக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி டிரஸ்ட் அறங்காவலர் கிருஷ்ணகுமார் பேசியதாவது:
“ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. இந்தப் படம் உருவானதே ஒரு பெரிய மிராகிள்தான். ஒவ்வொரு கட்டத்திலும் நடந்த சில சம்பவங்கள்தான் இந்தப் படத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. முதலில் வீரமணி ராஜு சார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஏற்பட்ட அறிமுகம் இந்தப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. என் குருவைப் பற்றிய செய்தி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த முயற்சியை ஆரம்பித்தேன்.
நான் ஒரு சம்பளம் வாங்கும் தொழிலாளி. என்னிடம் அளவில்லாத நிதி வசதிகள் எதுவும் கிடையாது. ஆனாலும் என் குருவின் வாழ்க்கையையும் அவரது செய்தியையும் எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த எண்ணத்தோடு தியாகு சாரை அணுகினேன். அவர் ‘நீங்கள் குழப்பம் கொள்ள வேண்டாம், நாம் பண்ணலாம்’ என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அதன்பிறகு நித்யானந்தம் சார் இந்தப் பயணத்தில் இணைந்தார். அவர் பெங்களூரு, பொய்யாமணி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தகவல்களைச் சேகரித்து, ஒரு ஸ்கிரிப்ட்டையும் உருவாக்கிக் கொடுத்தார். அந்த ஸ்கிரிப்ட்டைப் படித்தபோது படத்தை உருவாக்கலாம் என்ற நம்பிக்கை வந்தது.
இந்தப் படத்தில் எனக்கு பெரிய பங்களிப்பு எதுவும் கிடையாது. தியாகு சார் மற்றும் நித்யானந்தம் சார் ஆகியோரின் மேற்பார்வையில்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது. தியாகு சார் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தார். குறிப்பாக அவர் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் விஷயங்களை விளக்கிய விதம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அபிஷேக் எனது குடும்பத்தில் ஒருவரைப் போல ஆகிவிட்டார். அவர் இசையமைத்திருக்கிறார். படத்தில் நடித்துள்ள அனைத்து கலைஞர்களும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள்.
21 ஆண்டுகளாக நான் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியுடன் இருந்திருக்கிறேன். அதனால் அவரது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நான் ஒரு தனிப்பட்ட பார்வையில் பார்த்திருக்கிறேன். எனவே படத்தில் சில விஷயங்களைப் பார்க்கும்போது எனது குருவையே திரும்பப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்தப் படத்தை உருவாக்க உதவிய வீரமணி ராஜு சார் முதல் சத்யஜோதி ஃபிலிம்ஸ், தியாகு சார், நித்யானந்தம் சார், அபிஷேக் மற்றும் அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தை இவ்வளவு சிறப்பாக உருவாக்கி உயிர்ப்பித்த அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.”
இயக்குநர் சிறுத்தை சிவா பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். சாய்ராம். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து, இந்த சிறந்த படத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கிய கிருஷ்ணகுமார் சாருக்கு முதலில் நன்றி. அவரை நான் முதன்முதலில் சந்தித்தது சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான். ஆனால் முதல் சந்திப்பிலேயே நீண்ட காலமாகப் பழகிய ஒருவரைப் போன்ற நெருக்கமான உணர்வு ஏற்பட்டது. அவருடன் பேசும்போது பெரும்பாலும் சாய்பாபா மற்றும் அவரது குருவைப் பற்றித்தான் பேசுவார். பொய்யாமணியில் ஒரு கோயில் கட்டியிருப்பதாக அவர் கூறியபோது, பக்தியை மட்டும் கொண்டிருப்பதைக் கடந்து, அந்த பக்திக்காக ஒரு கோயிலை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்று நினைத்தேன்.
கிருஷ்ணகுமார் சார் தனது குருவைப் பற்றி இவ்வளவு அற்புதமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பதை மனதாரப் பாராட்டுகிறேன். சாய்பாபாவை நானும் மனதார எனது குருவாக ஏற்றுக்கொண்டு, அவரது இருப்பை ஒவ்வொரு நொடியும் உணர்ந்திருக்கிறேன். குரு என்பவர் நமக்கு நிழலைப் போலவும், இருளில் வெளிச்சத்தைப் போலவும் இருப்பார். அந்த உணர்வை இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னால் முழுமையாக உணர முடிந்தது. ராதாகிருஷ்ண சுவாமிஜியின் கதாபாத்திரத்தில் நடித்த மௌலி சார் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் அது நடிப்பு என்றே தெரியவில்லை; உண்மையிலேயே ஸ்வாமிஜி அங்கே இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
படத்தின் இசையமைப்பாளர் அபிஷேக்கின் பங்களிப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் இடம்பெறும் பாடல் காட்சி மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே கண்கள் கலங்கும் அளவுக்கு இசையும் காட்சியும் ஒன்றாக இணைந்திருந்தன. இயக்குநர் நித்யானந்தம் சார் நீண்ட கால அனுபவத்துடன் இந்தப் படத்தைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். வசனகர்த்தா யார் கண்ணன் சாரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. அவரது எழுத்திலும், பாடல் வரிகளிலும் அதே வலிமையும் ஆழமும் இருப்பதை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.
குறிப்பாக இறுதியில் இடம்பெறும் பாடல் முழுமையான ஆன்மிக அனுபவத்தைத் தருகிறது. பாடலைப் பாடிய விதமும், இசையும், காட்சிகளும் இணைந்து அந்த உணர்வை அழகாகக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சாய்பாபாவின் அருள் கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன். நன்றி.”
இயக்குநர் நித்யானந்தம் பேசியதாவது:
வாழ்க்கையில் எல்லாமே விதிக்கப்பட்டதுதான். இந்தப் படத்தைப் பற்றி பேசும்போது, ‘இயக்கம்’ என்ற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால், நானும் இந்தப் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருமே ஒவ்வொரு தருணத்திலும் ஒரு கருவியாகத்தான் செயல்பட்டோம். எங்கள் மூலமாக ஏதோ ஒரு சக்தி இந்தப் படத்தை உருவாக்கியதாகவே உணர்கிறோம்.
இதற்கு ஓர் உதாரணமாக, பொய்யாமணி கிராமத்தில் படப்பிடிப்புக்குத் திட்டமிட்டு இரவில் அங்கு சென்றபோது பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. மறுநாள் முழுவதும் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. ட்ரோன் படப்பிடிப்புக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். மழை தொடர்ந்தால் எப்படிப் படப்பிடிப்பை நடத்துவது என்று கவலையாக இருந்தது. ஆனால், மறுநாள் காலையில் ஒரு துளி மழைகூட பெய்யவில்லை. மாலை ஐந்து மணிக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டோம் என்று சொன்ன பிறகுதான் மீண்டும் மழை பெய்தது. இதுபோலப் பல தருணங்களில் எங்களுக்குத் தேவையான அனைத்தும் தடையின்றி கிடைத்தன.
இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்தது உயர்ந்த ஆன்மிக சக்திகளும், ஷீரடியில் சாய்பாபாவின் அருளும், மயிலாப்பூர் சிவகாமி ஆலயத்தில் அருள்பாலிக்கும் நரசிம்ம சுவாமியின் அருளும், பொய்யாமணியில் நிலவும் தெய்வீக அதிர்வுகளும்தான் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் மூலம் அந்த ஆன்மிக அனுபவத்தைப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அரிய வாய்ப்பை உருவாக்கித் தந்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் சாருக்கு எனது கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!”
பின்னணி பாடகர் வீரமணி ராஜு பேசியதாவது:
“இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு மிகப்பெரிய பாக்கியம். குறிப்பாக, ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் குருபக்தியைப் பற்றி சொல்ல வேண்டும். கிருஷ்ணகுமார் சார் எப்போதும் தனது குருவைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். தனது குருவின் செய்தி உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி மிகப்பெரியது. பொய்யாமணி கோயிலுக்குச் சென்றபோது அங்கிருந்த ஆன்மிகச் சூழலும், ராதாகிருஷ்ண சுவாமிஜி, சாய்பாபா, நரசிம்ம சுவாமி ஆகியோரின் திருவுருவங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. அந்த இடத்தின் ஆன்மிக உணர்வை இந்தப் படத்தின் மூலம் அனைவரும் உணர முடியும்.
இந்தப் படத்தில் எனக்கும் ஒரு பங்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. குறிப்பாக, எனது மகன் இசையமைக்கும் படத்தில் நான் பாடியிருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். நான் பல முன்னணி பாடகர்களுடன் இணைந்து பாடியிருக்கிறேன். ஆனால் என் மகன் இசையமைக்கும் படத்தில் நான் பாடுவது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் சிறப்பான அனுபவம். நான் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பக்திப் பாடல்களையும் ஆல்பங்களையும் பாடியிருக்கிறேன். இந்தப் படத்திலும் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது பாபாவின் ஆசீர்வாதமாகவே நான் பார்க்கிறேன்.
என் மகன் இசையமைத்த பாடல்களில் பொய்யாமணி கோயிலின் பெயரையே பல்லவியில் அழகாக இடம்பெறச் செய்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் ஒரு தெய்வீகமான படைப்பு என்பதால், அதற்கேற்ற வகையில் இசையும் காட்சிகளும் இருக்க வேண்டும் என்று அவனிடம் கூறினேன். இந்தப் படத்தின் இசைப் பணியில் அவன் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறான். அதற்காக கிருஷ்ணகுமார் சாருக்கும், படக்குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் மூலம் சாயிநாதரின் அருளும், ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கையும் அவருடைய குருவின் செய்தியும் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். குறிப்பாக, சாய்பாபாவின் ஆரத்திப் பாடல்களை இந்தப் படத்துக்காக தமிழில் பாடும் வாய்ப்பு கிடைத்திருப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது எனக்கு கிடைத்த ஒரு பெரிய பாக்கியம். பாபாவின் அருளால் இந்தப் படம் அனைவரிடமும் சென்றடைய வேண்டும். கிருஷ்ணகுமார் சார் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்.”
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசியதாவது:
“ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் குரு என்பவர் மிகவும் முக்கியமானவர். வழிகாட்டியாகவும், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் துணையாகவும் குரு இருப்பது அவசியம். அந்த வகையில் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. அவரது வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டபோது, இந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
கிருஷ்ணகுமார் சார் என்னை அணுகி, தனது குருவைப் பற்றிய இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியபோது, அவரது எண்ணமும் அர்ப்பணிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி தனது ஆன்மிகப் பயணத்தில் மேற்கொண்ட பணிகள், பெங்களூருவில் சாய் சென்டரை உருவாக்கிய விதம் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி தெரிந்துகொண்டபோது, இந்தப் படத்திற்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
கிருஷ்ணகுமார் சார் தனது வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைச் செய்திருந்தாலும், தனது குருவின் வாழ்க்கை மற்றும் செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. குருவின் மீது ஒருவர் கொண்டிருக்கும் நன்றியும் பக்தியும் அவரை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு இந்த முயற்சியும் ஒரு சிறந்த உதாரணம். இதுபோன்ற மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் பயணத்தையும் மையமாகக் கொண்டு இன்னும் பல திரைப்படங்கள் உருவாக வேண்டும்.
இந்தப் படத்தை உருவாக்கிய கிருஷ்ணகுமார் சார் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். சாய்பாபாவின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
சத்யன் பட் பேசியதாவது:
“இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெறும் திரைப்படம் மட்டுமல்ல; இதயத்திலிருந்து உருவான ஒரு படைப்பு. கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குழுவினரின் முயற்சியால்தான் இந்தக் கனவு நனவாகியிருக்கிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டுமென அழைக்கப்பட்ட பல முக்கியப் பிரமுகர்களில் சிலரால் வர இயலவில்லை. இங்கு வருகை தந்து படத்தைப் பார்த்து ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, இந்தப் படத்தின் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய சக்தி கிருஷ்ணகுமார்தான் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அவருடைய இடைவிடாத முயற்சியும், ஆர்வமும், குருவின் மீதான அளவற்ற பக்தியும்தான் இந்தப் படத்தைச் சாத்தியமாக்கியுள்ளன. பணம் என்பது இரண்டாம் பட்சம்தான்; இந்த முயற்சியின் மீதான நம்பிக்கையும் அர்ப்பணிப்பும்தான் முக்கியம்.
இந்தப் படம் உருவாக முக்கியப் பங்காற்றிய இரண்டு பெண்களையும் இங்கே குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டும். தயாரிப்பாளர் சுஜாதா கிருஷ்ணகுமார் இந்தப் பயணத்தில் மிகுந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளார். அதேபோல், என் மகள் இந்தப் படத்திற்காகப் பல வகைகளில் துணை நின்றுள்ளார். வீட்டையே சாய்பாபா கோயிலாக மாற்றிவிட்டீர்கள் என்று அவர் என்னிடம் கேட்கும் அளவுக்கு, இந்தப் படத்தின் பணிகள் எங்கள் குடும்ப வாழ்க்கையிலும் ஒரு பகுதியாகிவிட்டன. அவர்கள் இருவரின் பங்களிப்பும் இல்லாமல் இந்தப் படம் உருவாகியிருக்காது.
இயக்குநர் நித்யானந்தமும் அவரது குழுவினரும், படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சிறப்பான உழைப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்தைத் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் ஊடக நண்பர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. நீண்ட நேரம் பொறுமையாக இருந்து எங்களுக்குத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. சாய்பாபா அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.”
திருமதி விஜயா அருண் பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். கிருஷ்ணகுமார் சாரின் மனைவி, நண்பர்கள் உள்ளிட்ட அனைவரின் சார்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிருஷ்ணகுமார் சார் என்னிடம் தனது குருவைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஆனால் இன்று இந்தப் படத்தைப் பார்த்தபோதுதான், தனது குருவின் கருணையையும், அவரது வாழ்க்கையில் குரு ஏற்படுத்திய தாக்கத்தையும் அவர் எந்த அளவுக்கு அனுபவித்திருக்கிறார் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
கிருஷ்ணகுமார் சார் தனது குருவின் சீடராக இருந்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை இப்போது என்னால் முழுமையாக உணர முடிகிறது. அந்த அனுபவத்தையும், தனது குருவின் பெருமையையும் இந்தப் படத்தின் மூலம் அனைவருடனும் பகிர்ந்துகொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்வாமிஜியின் அருளும், பாபாவின் ஆசீர்வாதமும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் என்று நம்புகிறேன். அவரது கிராமத்திற்கும் அங்குள்ள கோயிலுக்கும் செல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்தக் கோயில் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு இருந்த ஆன்மிகச் சூழலும், நேர்மறையான அதிர்வுகளும் மிகவும் சிறப்பாக இருந்தன.
இவ்வளவு நிறைவான ஒரு அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்ட கிருஷ்ணகுமார் சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அவரது குருவின் பெருமையும், அருளும் இன்னும் பலரிடம் சென்றடைய வேண்டும்.”
பத்திரிகையாளர், மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது:
“சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா மற்றும் கலைத் துறையுடன் தொடர்புடைய பலரை பார்த்திருக்கிறேன். இன்று கிருஷ்ணகுமார் சாரின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை ஒரு பார்வையாளராக பார்த்தேன்; ஆனால் பார்த்த பிறகு பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எனது குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் அடிக்கடி சொல்லும் ‘எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது; எதுவும் புதிதாக எழுதப்படுவதில்லை’ என்ற கருத்து எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த வகையில், இன்று இந்தப் படத்தின் நிகழ்வில் நான் வந்து நிற்பதும் ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.
கிருஷ்ணகுமார் சாரின் வாழ்க்கைப் பயணத்தைப் பார்க்கும்போது குருவின் அருள் ஒருவரை எப்படி வழிநடத்துகிறது என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர் என்று அவர் தன்னைப் பற்றிக் கூறினாலும், பின்னர் தனது உழைப்பாலும் குருவின் அருளாலும் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். ‘விடியும் என்று விண்ணை நம்புகிற நீ, முடியும் என்று உன்னை நம்பு’ என்ற வரியைப் போல, தன்னால் முடியும் என்று நம்பி உழைத்திருக்கிறார். இன்று அவர் நினைத்ததை நிறைவேற்றி நிற்கிறார். குருவை நம்பினால், குரு நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்வார் என்பதற்கு அவரது வாழ்க்கையே ஒரு உதாரணம்.
சாய்பாபாவின் போதனைகளில் முக்கியமானது நம்பிக்கையும் பொறுமையும். அந்த நம்பிக்கையையும் சரணாகதியையும் இந்தப் படத்தில் உணர முடிகிறது. குருவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆன்மிகப் பயோபிக், பலருக்கும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இந்தப் படத்தை உருவாக்கிய கிருஷ்ணகுமார் சார், இயக்குநர் நித்யானந்தம் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில், ஒரு சிறிய வருத்தத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். குருவின் குரு என்று சொல்லப்படும் கதாபாத்திரத்திற்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் திரையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆன்மிகத்தில் குருவுக்கும், குருவின் குருவுக்கும் இருக்கும் இடம் மிகவும் உயர்ந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு மூத்த சீடர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரும் வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்தப் படம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும் இந்த ஆன்மிகப் பயணத்தையும் குருவின் செய்தியையும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நன்றி, வணக்கம்.”இயக்குநர் சிறுத்தை சிவா பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். சாய்ராம். இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்து, இந்த சிறந்த படத்தைப் பார்க்கும் வாய்ப்பை வழங்கிய கிருஷ்ணகுமார் சாருக்கு முதலில் நன்றி. அவரை நான் முதன்முதலில் சந்தித்தது சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான். ஆனால் முதல் சந்திப்பிலேயே நீண்ட காலமாகப் பழகிய ஒருவரைப் போன்ற நெருக்கமான உணர்வு ஏற்பட்டது. அவருடன் பேசும்போது பெரும்பாலும் சாய்பாபா மற்றும் அவரது குருவைப் பற்றித்தான் பேசுவார். பொய்யாமணியில் ஒரு கோயில் கட்டியிருப்பதாக அவர் கூறியபோது, பக்தியை மட்டும் கொண்டிருப்பதைக் கடந்து, அந்த பக்திக்காக ஒரு கோயிலை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்று நினைத்தேன்.
கிருஷ்ணகுமார் சார் தனது குருவைப் பற்றி இவ்வளவு அற்புதமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பதை மனதாரப் பாராட்டுகிறேன். சாய்பாபாவை நானும் மனதார எனது குருவாக ஏற்றுக்கொண்டு, அவரது இருப்பை ஒவ்வொரு நொடியும் உணர்ந்திருக்கிறேன். குரு என்பவர் நமக்கு நிழலைப் போலவும், இருளில் வெளிச்சத்தைப் போலவும் இருப்பார். அந்த உணர்வை இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னால் முழுமையாக உணர முடிந்தது. ராதாகிருஷ்ண சுவாமிஜியின் கதாபாத்திரத்தில் நடித்த மௌலி சார் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பல இடங்களில் அது நடிப்பு என்றே தெரியவில்லை; உண்மையிலேயே ஸ்வாமிஜி அங்கே இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
படத்தின் இசையமைப்பாளர் அபிஷேக்கின் பங்களிப்பும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் இடம்பெறும் பாடல் காட்சி மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே கண்கள் கலங்கும் அளவுக்கு இசையும் காட்சியும் ஒன்றாக இணைந்திருந்தன. இயக்குநர் நித்யானந்தம் சார் நீண்ட கால அனுபவத்துடன் இந்தப் படத்தைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். வசனகர்த்தா யார் கண்ணன் சாரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. அவரது எழுத்திலும், பாடல் வரிகளிலும் அதே வலிமையும் ஆழமும் இருப்பதை இந்தப் படத்தில் பார்க்க முடிகிறது.
குறிப்பாக இறுதியில் இடம்பெறும் பாடல் முழுமையான ஆன்மிக அனுபவத்தைத் தருகிறது. பாடலைப் பாடிய விதமும், இசையும், காட்சிகளும் இணைந்து அந்த உணர்வை அழகாகக் கொண்டு வந்திருக்கின்றன. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகள். இந்தத் திரைப்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சாய்பாபாவின் அருள் கிடைக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன். நன்றி.”
பின்னணி பாடகர் வீரமணி ராஜு பேசியதாவது:
“இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு மிகப்பெரிய பாக்கியம். குறிப்பாக, ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் குருபக்தியைப் பற்றி சொல்ல வேண்டும். கிருஷ்ணகுமார் சார் எப்போதும் தனது குருவைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார். தனது குருவின் செய்தி உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி மிகப்பெரியது. பொய்யாமணி கோயிலுக்குச் சென்றபோது அங்கிருந்த ஆன்மிகச் சூழலும், ராதாகிருஷ்ண சுவாமிஜி, சாய்பாபா, நரசிம்ம சுவாமி ஆகியோரின் திருவுருவங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. அந்த இடத்தின் ஆன்மிக உணர்வை இந்தப் படத்தின் மூலம் அனைவரும் உணர முடியும்.
இந்தப் படத்தில் எனக்கும் ஒரு பங்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. குறிப்பாக, எனது மகன் இசையமைக்கும் படத்தில் நான் பாடியிருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். நான் பல முன்னணி பாடகர்களுடன் இணைந்து பாடியிருக்கிறேன். ஆனால் என் மகன் இசையமைக்கும் படத்தில் நான் பாடுவது என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் சிறப்பான அனுபவம். நான் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பக்திப் பாடல்களையும் ஆல்பங்களையும் பாடியிருக்கிறேன். இந்தப் படத்திலும் பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது பாபாவின் ஆசீர்வாதமாகவே நான் பார்க்கிறேன்.
என் மகன் இசையமைத்த பாடல்களில் பொய்யாமணி கோயிலின் பெயரையே பல்லவியில் அழகாக இடம்பெறச் செய்திருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் ஒரு தெய்வீகமான படைப்பு என்பதால், அதற்கேற்ற வகையில் இசையும் காட்சிகளும் இருக்க வேண்டும் என்று அவனிடம் கூறினேன். இந்தப் படத்தின் இசைப் பணியில் அவன் மிகவும் சிறப்பாகச் செய்திருக்கிறான். அதற்காக கிருஷ்ணகுமார் சாருக்கும், படக்குழுவினருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் மூலம் சாயிநாதரின் அருளும், ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கையும் அவருடைய குருவின் செய்தியும் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். குறிப்பாக, சாய்பாபாவின் ஆரத்திப் பாடல்களை இந்தப் படத்துக்காக தமிழில் பாடும் வாய்ப்பு கிடைத்திருப்பதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இது எனக்கு கிடைத்த ஒரு பெரிய பாக்கியம். பாபாவின் அருளால் இந்தப் படம் அனைவரிடமும் சென்றடைய வேண்டும். கிருஷ்ணகுமார் சார் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்.”
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசியதாவது:
“ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் குரு என்பவர் மிகவும் முக்கியமானவர். வழிகாட்டியாகவும், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் துணையாகவும் குரு இருப்பது அவசியம். அந்த வகையில் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை மிகவும் முக்கியமானது. அவரது வாழ்க்கையைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டபோது, இந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
கிருஷ்ணகுமார் சார் என்னை அணுகி, தனது குருவைப் பற்றிய இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று கூறியபோது, அவரது எண்ணமும் அர்ப்பணிப்பும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி தனது ஆன்மிகப் பயணத்தில் மேற்கொண்ட பணிகள், பெங்களூருவில் சாய் சென்டரை உருவாக்கிய விதம் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி தெரிந்துகொண்டபோது, இந்தப் படத்திற்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
கிருஷ்ணகுமார் சார் தனது வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைச் செய்திருந்தாலும், தனது குருவின் வாழ்க்கை மற்றும் செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது. குருவின் மீது ஒருவர் கொண்டிருக்கும் நன்றியும் பக்தியும் அவரை மேலும் உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதற்கு இந்த முயற்சியும் ஒரு சிறந்த உதாரணம். இதுபோன்ற மனிதர்களின் வாழ்க்கையையும், அவர்களின் பயணத்தையும் மையமாகக் கொண்டு இன்னும் பல திரைப்படங்கள் உருவாக வேண்டும்.
இந்தப் படத்தை உருவாக்கிய கிருஷ்ணகுமார் சார் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். சாய்பாபாவின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.”
திருமதி விஜயா அருண் பேசியதாவது:
“அனைவருக்கும் வணக்கம். கிருஷ்ணகுமார் சாரின் மனைவி, நண்பர்கள் உள்ளிட்ட அனைவரின் சார்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். கிருஷ்ணகுமார் சார் என்னிடம் தனது குருவைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஆனால் இன்று இந்தப் படத்தைப் பார்த்தபோதுதான், தனது குருவின் கருணையையும், அவரது வாழ்க்கையில் குரு ஏற்படுத்திய தாக்கத்தையும் அவர் எந்த அளவுக்கு அனுபவித்திருக்கிறார் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
கிருஷ்ணகுமார் சார் தனது குருவின் சீடராக இருந்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை இப்போது என்னால் முழுமையாக உணர முடிகிறது. அந்த அனுபவத்தையும், தனது குருவின் பெருமையையும் இந்தப் படத்தின் மூலம் அனைவருடனும் பகிர்ந்துகொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்வாமிஜியின் அருளும், பாபாவின் ஆசீர்வாதமும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும் என்று நம்புகிறேன். அவரது கிராமத்திற்கும் அங்குள்ள கோயிலுக்கும் செல்லும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அந்தக் கோயில் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு இருந்த ஆன்மிகச் சூழலும், நேர்மறையான அதிர்வுகளும் மிகவும் சிறப்பாக இருந்தன.
இவ்வளவு நிறைவான ஒரு அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்ட கிருஷ்ணகுமார் சாருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் மூலம் அவரது குருவின் பெருமையும், அருளும் இன்னும் பலரிடம் சென்றடைய வேண்டும்.”
பத்திரிகையாளர், மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது:
“சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு சினிமா மற்றும் கலைத் துறையுடன் தொடர்புடைய பலரை பார்த்திருக்கிறேன். இன்று கிருஷ்ணகுமார் சாரின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை ஒரு பார்வையாளராக பார்த்தேன்; ஆனால் பார்த்த பிறகு பாராட்டாமல் இருக்க முடியவில்லை. எனது குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் அடிக்கடி சொல்லும் ‘எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது; எதுவும் புதிதாக எழுதப்படுவதில்லை’ என்ற கருத்து எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த வகையில், இன்று இந்தப் படத்தின் நிகழ்வில் நான் வந்து நிற்பதும் ஏற்கனவே எழுதப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.
கிருஷ்ணகுமார் சாரின் வாழ்க்கைப் பயணத்தைப் பார்க்கும்போது குருவின் அருள் ஒருவரை எப்படி வழிநடத்துகிறது என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார். படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர் என்று அவர் தன்னைப் பற்றிக் கூறினாலும், பின்னர் தனது உழைப்பாலும் குருவின் அருளாலும் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார். ‘விடியும் என்று விண்ணை நம்புகிற நீ, முடியும் என்று உன்னை நம்பு’ என்ற வரியைப் போல, தன்னால் முடியும் என்று நம்பி உழைத்திருக்கிறார். இன்று அவர் நினைத்ததை நிறைவேற்றி நிற்கிறார். குருவை நம்பினால், குரு நம்மை கடவுளிடம் அழைத்துச் செல்வார் என்பதற்கு அவரது வாழ்க்கையே ஒரு உதாரணம்.
சாய்பாபாவின் போதனைகளில் முக்கியமானது நம்பிக்கையும் பொறுமையும். அந்த நம்பிக்கையையும் சரணாகதியையும் இந்தப் படத்தில் உணர முடிகிறது. குருவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆன்மிகப் பயோபிக், பலருக்கும் ஒரு புதிய அனுபவத்தைத் தரும். இந்தப் படத்தை உருவாக்கிய கிருஷ்ணகுமார் சார், இயக்குநர் நித்யானந்தம் உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே நேரத்தில், ஒரு சிறிய வருத்தத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். குருவின் குரு என்று சொல்லப்படும் கதாபாத்திரத்திற்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் திரையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆன்மிகத்தில் குருவுக்கும், குருவின் குருவுக்கும் இருக்கும் இடம் மிகவும் உயர்ந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு மூத்த சீடர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினரும் வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இந்தப் படம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும் இந்த ஆன்மிகப் பயணத்தையும் குருவின் செய்தியையும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நன்றி, வணக்கம்.”
ஓய்வுபெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி தாமரைக்கண்ணன் பேசியதாவது:
“கிருஷ்ணகுமார் சார் என்னை இந்தப் படத்தைப் பார்க்க அழைத்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில், ஒவ்வொருவரின் மனதையும் ஏதாவது ஒரு சம்பவம் நிச்சயம் தொட்டுச் செல்லும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமார் சார் அளித்த தகவல்களுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் பங்கும், அவர்களின் உழைப்பும் திரையில் தெளிவாகத் தெரிகிறது.
இந்தப் படத்தில் என்னை மிகவும் பாதித்த மூன்று விஷயங்கள் இருக்கின்றன. முதலில், ‘யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம், அதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை’ என்று ஸ்வாமிஜி கூறும் இடம் மிகச் சிறப்பான செய்தியைச் சொல்கிறது. இரண்டாவதாக, ஒரு பெண் தன்னை விதவை என்று கூறி பாதபூஜை செய்ய அனுமதி கேட்கும்போது, ‘நீங்கள் எனக்கு உணவு கொடுத்தபோதே என்னுடைய தாயாகிவிட்டீர்கள்’ என்று ஸ்வாமிஜி கூறும் காட்சி மிகவும் வலிமையானது. இது மிக ஆழமான மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது.
மூன்றாவதாக, ஸ்வாமிஜியின் குருவுக்கும் அவருக்கும் இடையிலான உறவை வெளிப்படுத்தும் ஒரு சம்பவம் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஒரு விஷயம் தனக்கு முன்கூட்டியே எப்படி தெரிந்தது என்று கேட்கப்படும்போது, அவர் அளிக்கும் பதில் ஒரு குருவுக்கும் சீடனுக்கும் இடையிலான உறவு எப்படிப்பட்டது என்பதை மிக அழகாகச் சொல்கிறது. அந்த உறவுதான் கிருஷ்ணகுமார் சாருக்கும் அவரது குருவுக்கும் இருந்திருக்கிறது என்று நான் உணர்கிறேன்.
இந்தப் படத்தின் இசை, பாடல்கள், பாடல் வரிகள் என அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளன. இறுதியாக நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ‘இறை அருள்’ என்பதற்கு ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அது ‘பொய்யாமணி’. அதேபோல் கிருஷ்ணகுமார் சாரைப் பற்றியும் சொல்லலாம். அவர் ஒருபோதும் பொய் பேசுவதில்லை. நன்றி.”
வசனகர்த்தா யார் கண்ணன் பேசியதாவது:
“விரட்டினார்கள், இடம் கிடைத்தது; கல்லெறிந்தார்கள், வீடானது; தீ வைத்தார்கள், விளக்கானது என்று எதிர்மறையான விஷயங்களைக்கூட நேர்மறையாக மாற்றுவதுதான் ஆன்மிகம். அந்த வகையில் ‘சத்யஜோதி’ என்ற பெயரிலேயே ஒரு நல்ல அர்த்தம் இருக்கிறது. சத்யஜோதி நிறுவனத்தில் சில ஆண்டுகள் கிரியேட்டிவ் டைரக்டராகப் பணியாற்றியவன் என்ற பெருமை எனக்கு எப்போதும் உண்டு. அங்கு பணியாற்றுபவர்கள் எந்தச் சூழ்நிலை வந்தாலும் தைரியமாக எதிர்கொண்டு செயல்படக்கூடியவர்கள்.
இந்தப் படத்துக்கு நித்யானந்தம் இயக்குநராக இருக்க வேண்டும் என்று ஜி.டி. முடிவு செய்தபோது, அவர் என்னை வசனகர்த்தாவாகத் தேர்ந்தெடுத்தார். அதன் பிறகு அவர் இந்தப் படத்திற்காக ஆய்வு செய்து, திரைக்கதையை உருவாக்கினார். படத்தின் இசை ஒரு முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும் என்பதில் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தப்பட்டது. அபிஷேக்கிடம் கொடுத்த பிறகு, படத்தின் காட்சிகளுக்கும் கதைக்கும் ஏற்ற வகையில் இசை உருவானது. ‘தொட்டிலில் தொடங்கிடும் தாலாட்டு’ உள்ளிட்ட பாடல்களின் வரிகளும், இசையும் படத்தின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகின்றன.
சாய்பாபாவின் வாழ்க்கையில் அவரது குரு வழங்கிய செங்கல்லை நினைவாகச் சுமந்து சென்ற சம்பவமும், அதிலிருந்து உருவான பாடலும் மிகவும் முக்கியமானவை. படத்தின் கிளைமாக்ஸில் வசனங்களைவிட பாடல் வழியாக அந்த உணர்வை வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று நித்யானந்தத்திடம் கூறினேன். அவர் அதற்கு சம்மதித்தார். அப்போது ‘வானருவி’ என்ற வார்த்தை இயல்பாக வந்தது. அந்த வானருவி நதியாக மாறுவது போல, பாடலும் காட்சிகளோடு இணைந்து படத்தின் உணர்வை எடுத்துச் செல்கிறது.
வாழ்க்கையில் வெற்றி, பணம், சாதனை மட்டும் போதாது; அதற்கு அப்பாற்பட்ட மனநிம்மதியும் திருப்தியும் இருக்கிறது. அந்த மனநிம்மதியை இந்தப் படம் எனக்குக் கொடுத்திருக்கிறது. எந்த மதம், சாதி, சமூகப் பின்னணி என்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை அமைதிப்படுத்தவும், அன்பையும் ஆன்மிகத்தையும் பேசவும் இதுபோன்ற படைப்புகள் தேவை. தனது குருவின் நினைவுக்காக கிருஷ்ணகுமார் சார் மேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. சாய்பாபா ஒரு செங்கல்லை தனது குருவின் நினைவாகச் சுமந்தது போல, கிருஷ்ணகுமார் சார் தனது குருவின் செய்தியை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டிருக்கிறார்.”
ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜியின் வாழ்க்கை, ஆன்மிகப் பாதை மற்றும் சேவைப் பணிகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், அவரது வாழ்க்கை வரலாற்றைத் திரை வழியாகப் பதிவு செய்யும் முயற்சியாக அமைந்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் இடம்பெற்ற உரைகளும், திரையிடப்பட்ட படத்தின் காட்சிகளும் இப்படம் ஆன்மிகம், பக்தி மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியிருப்பதை வெளிப்படுத்தின.