‘ கட்டில் ‘ பட இசை வெளியீட்டு விழா!

‘ கட்டில் ‘ பட இசை வெளியீட்டு விழாவில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், பிரபாகர் ராஜா M L A, தயாரிப்பாளர், இயக்குநர்,கதாநாயகன்,
E.V. கணேஷ் பாபு சிருஷ்டி டாங்கே, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவாளர் Wide angle ரவிசங்கர், நடன இயக்குநர் சாந்தி, நடிகர் சம்பத்ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதை, வசனம் எழுத ‘கட்டில்’ படத்தை இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாகவும் நடித்து தயாரித்துள்ளார்.

சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார். ஓவியர் ஷ்யாம், எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகள் கீதா கைலாசம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ்

பாடல் வரிகள் – கவிப்பேரரசு வைரமுத்து

ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கரன்

இசை – ஸ்ரீகாந்த் தேவா

இப்படத்திற்காக சித்ஸ்ரீராம் பாடிய கோயிலிலே என்கிற பாடல் இன்று வெளியானது. ஸ்ரீகாந்த்தேவா இசையில் வைரமுத்து இப்பாடலை எழுதியுள்ளார். இந்த கட்டில் படத்திற்காக சித்ஸ்ரீராம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் பாடியிருக்கிறார்.

அனைத்து மொழிகளிலும் தணிக்கை செய்யப் பட்டு ‘கட்’ இல்லாமல் கிளியர் யூ சான்றிதழை பெற்று திரையரங்குகளுக்கு வரத் தயாராக இருக்கிறது கட்டில்.