காதலில் புகுந்து விளையாடும் அரசியல் பற்றிக் கூறும் ‘வெள்ளை உலகம்’

DSC_0206ஆன்ட்டி வைரஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும்  ஸ்மேஹம் எண்டர்டெய்ன் மெண்ட் படநிறுவனங்கள் சார்பாக சுசில் குமார் ஜெயின் தயாரிக்கும் படம் “வெள்ளை உலகம்”

இந்த படத்தில் அப்புக்குட்டி, மேகநாlன்,ரோசன்,திருப்பூர் மணி, அமர், முத்துவீரா, சாகுல்,ஜனா, புருசோத் தீப்பெட்டி கணேசன், ரேணிகுண்டா ரோஜாபதி,காதல் சுகுமார், சம்பத்ராம் மற்றும் சரவணன் மீனாட்சி புகழ் வெங்கடேசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகிகளாக ஐரின், காவ்யா இருவரும் நடித்துள்ளனர்.வில்லியாக பொம்மி என்கிற பெண் அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு     –      அருண்

இசை             –      ஜெய்கிரிஷ்

வசனம்          –       எழுத்தாளர் தமிழ்மணவாளன் , உதயா ராமகிருஷ்ணன் , மரணகானா விஜி.

எடிட்டிங்       –       சுரேந்தர்

பாடல்கள்     –       தமிழ்மணவாளன்,மோகன்ராஜ், உதயா ராமகிருஷ்ணன் ,

தயாரிப்பு   –   சுசில் குமார் ஜெயின்

இணை தயாரிப்பு    –   அதிகை சத்யமூர்த்தி, ஹாஸன், கே.ஜி.ரவீந்திரன்.

கதை, திரைக்கதை, இயக்கம் –  உதயா ராமகிருஷ்ணன்.

இவர் ரெட்டசுழி, 16, தா ஆகிய படங்களில் உதவி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் மலேசிய தமிழ் படமான “திணறல்” என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

“சாதி இன்றைய காலகட்டத்தில் காதலுடன் ஒன்றி எந்த விதத்தில் அரசியல் செய்து உலுக்கி கொண்டிருக்கிறது என்பதைத்தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

படத்திற்காக நாற்பது லட்சம் செலவில் திருப்பூரில் இரண்டு கிராமம் பிரமாண்டமாக உருவாக்கப் பட்டுள்ளது.  இந்த கிராமம் படப்பிடிப்பு முடிந்தவுடன் சுற்றியுள்ள மக்களுக்கு அன்பளிப்பாக படப்பிடிப்பு குழு வழங்கியுள்ளது.

குறைந்த பட்ஜெட்டில்  மிகபிரமாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப் படம் விரைவில் வெளியாக உள்ளது” என்று கூறுகிறார் இயக்குநர் உதயா ராமகிருஷ்ணன்.
​​