கிறிஸ்துமஸ் திருநாளில் வருகிறான் புதிய சூப்பர்ஹீரோ NETFLIX வழங்கும்’மின்னல் முரளி’

கிறிஸ்துமஸ் நன்னாளில் வருகிறான் புதிய சூப்பர்ஹீரோ, NETFLIX வழங்கும் “மின்னல் முரளி” ! டொவினோ தாமஸ் நடிப்பில், “மின்னல் முரளி” உலகமெங்கும் டிசம்பர் 24, 2021 அன்று Netflix தளத்தில் வெளியாகிறது ~

நெட்ஃபிக்ஸ் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் கொண்டாடுங்கள் மின்னல் முரளி திரைப்படத்தை, கிறிஸ்துமஸ் திருநாளில். 90 களின் பின்னணியில் அமைக்கப்பட்ட, மின்னல் முரளி திரைப்படம், ஜெய்சன் எனும், ஒரு சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதால் சூப்பர் ஹீரோ முரளியாக மாறிய, அற்புத சக்திகள் கிடைக்கப்பெற்றவனின் கதையை சொல்கிறது. Weekend Blockbusters (ஷோபியா பால்) தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கியுள்ளார்.

மலையாள இளம் நட்சத்திரம் டொவினோ தாமஸ் சூப்பர் ஹீரோ மின்னல் முரளியாக நடிக்கிறார். குரு சோமசுந்தரம், ஹரிஶ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளம் மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
இருள் சக்திக்கு எதிரான நல்ல சக்தியின் பயணத்தை, மின்னல் முரளி படத்தில் காணுங்கள் டிசம்பர் 24, 2021, Netflix தளத்தில்.

இயக்குநர்
பாசில் ஜோசப்

நடிகர்கள்
டொவினோ தாமஸ்
குரு சோமசுந்தரம்
ஹரிஶ்ரீ அசோகன்
அஜு வர்கீஸ்

எழுத்து , திரைக்கதை, வசனம்
அருண் A.R, ஜஸ்டின் மேத்திவ்ஸ்

பாடல்கள்
மனு மஞ்சித்

இசை
Shaan Rahman, Sushin Shyam

Netflix பற்றி
Netflix நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 209 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால் எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படததை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும். . சமீபத்திய தகவல்கள், புதிய செய்திகளுக்கு, follow us on IG @Netflix_IN, TW @NetflixIndia, TW South @Netflix_INSouth and FB @NetflixIndia சமூக வலைதளங்களில் இணைந்திருங்கள்.
Weekend Blockbusters பற்றி!
2014-ல் வெளியான பெங்களூர் டேஸ் திரைப்படத்தின் இணைதயாரிப்பு பணிகளை மேற்கொண்டதன் மூலம் Weekend Blockbusters தனது திரைப்பயணத்தை துவங்கியது. கேரளாவை தாண்டி முக்கியமான பெரும் நகரங்களில் வெளியாகிய பெங்களூர் டேஸ் திரைப்படம் ஒரு வெற்றிகரமான திரைப்படமாகவும், அதிக வசூல் செய்த மலையாள திரைப்படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. அதற்கு காரணமாக அமைந்தது Weekend Blockbusters நிறுவனம். அவர்களின் இரண்டாவது தயாரிப்பாக, 2016-ல் Dr பிஜு இயக்கத்தில் “ Kaadu Pookkunna Neram “ திரைப்படம், அனைவருக்கும் பிடித்த படமாகவும், விருது வென்ற திரைப்படமாகவும் அமைந்தது. 2017-ல் ஜிபு ஜேகப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான “ Munthirivallikal Thalirkkumbol” திரைப்படம் வணீக ரீதியாக பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து 2018-ல் பிஜு மேனன் நடிப்பில் “ Padayottam” எனும் காமெடி சாலை பயண திரைப்படத்தை உருவாக்கினர். மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமான Weekend Blockbusters உடைய “ மின்னல் முரளி “ திரைப்படம், 2021-ல் இந்தியாவின் முக்கியமான மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து, நிவின் பாலி நடிக்கும் “ பிஸ்மி ஸ்பெசல்” திரைப்படமும் வெளியாகும்.