‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ இசை கமல் வெளியிட்டார்!

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் ட்ரெய்லர் , இசை வெளியீடு மற்றும் அறிமுக விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விஷால் வெங்கட் இயக்கியிருக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார். நாசர், கே.எஸ் ரவிக்குமார், ரித்விகா, பானுப்பிரியா, நடித்துள்ளனர். ரதன் இசையமைத்துள்ளார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், கொரோனா போய்விடும் என பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் எனவும், செருப்பு போடுவதை கௌரவமாக நினைப்பது போல மாஸ்க் போடுவதையும் நினைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.