சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் – இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது.
நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் – ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்… வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான திரைக்கதையும்… இணைந்து சமீப காலங்களில் சூர்யாவின் மிகச்சிறந்த மற்றும் மனதிற்கு நெருக்கமான நடிப்புகளில் ஒன்றாக இந்த படம் அமையும் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.
திரையில் மமிதா பைஜூ தனது தனித்துவமான வசீகரத்தை வெளிப்படுத்த.. ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் மற்றும் சிறந்த நட்சத்திர நடிகர்கள் குழு இந்த உணர்வுபூர்வமான பயணத்திற்கு கூடுதலாக வலிமை சேர்த்துள்ளனர். ஜி. வி பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை… நிமிஷ் ரவியின் நேர்த்தியான ஒளிப்பதிவு… வெங்கி அட்லூரியின் தனித்துவமான கதை சொல்லும் பாணி… ஆகியவை இந்த ட்ரெய்லரை மேலும் மெருகூட்டுகிறது.
கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் படத்தின் உணர்வுபூர்வமான ஆழம் மற்றும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் திறன் குறித்தும் படக் குழுவினர் மிகுந்த நம்பிக்கையை பேச்சில் வெளிப்படுத்தினர். அந்த நம்பிக்கையை இந்த ட்ரெய்லர் முழுமையாக உறுதிப்படுத்தி இருப்பதுடன் மறக்க முடியாத திரையரங்க அனுபவத்திற்கான உத்திரவாதத்தையும் பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.
சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் – ஆகஸ்ட் 14ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் வார இறுதியில் மறக்க இயலாத உணர்ச்சிகளின் உலகத்தை இப்படம் பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது.
Link :


