‘பேட்டரி’ படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன் – இயக்குநர் வெற்றிமாறன்:

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,

தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பது தான் சினிமாவின் விதி. புட் அண்ட் டிட் வார்த்தைகள் ஓடிடி யில் டிரெண்ட் ஆகியிருக்கிறது. மீண்டும் வெற்றிபெறுவது என்பது பெரிய விஷயம். ஆனால், மணிபாரதி திரைக்கதை, வசனங்களை நண்பர்களுக்கு பகிர்ந்தளித்ததில் இருந்தே அவர் மீண்டும் வெற்றிபெறுவார் என்று தெரிகிறது. அவருக்கு தன்னைப் பற்றிய சரியான புரிதல்தான் இதற்கு காரணம். ஒரு படத்திற்கு திரைக்கதைத் தான் முக்கியம். திரைப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது அருமை, வேற லெவல் என்ற.. வார்தைகள் 20 கிட்ஸ்களின் தரக மந்திரமாக உள்ளது.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது,

மணிபாரதி சாரைப் பற்றி கூறவேண்டுமானால், நாங்கள் சாலையில் சந்தித்து பேசுவோம், அடிக்கடி போன் செய்து கதை கூறுவார். ஒருநாள் நான் ஒரு படம் இயக்கப் போகிறேன். உங்களுக்கு சிறந்த கதாபாத்திரம் இருக்கிறது. கண்டிப்பாக அழைக்கிறேன் என்றார். அதன்படி அழைத்தார். நானும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று பணியாற்றியிருக்கிறேன் என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன்பேசும்போது,:

இப்படம் ஆரம்பித்ததில் இருந்து மணிபாரதியை தெரியும். இப்படத்தை முடித்து விட்டு பார்க்க சொன்னார். அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை. அவர் கேட்டபோதே இப்படத்தை பார்த்திருந்தால் அவர் கூறியதுபோல இப்படம் வெளியாவதற்கு உதவி புரிந்திருப்பேன். ஆனால், இப்போது PVR வெளியிகிறார்கள். நான் வெளியிடுவதைவிட இப்படம் இப்போது பெரிய வெளியீடாக தான் இருக்கும். அது இப்படத்திற்கு நல்லது என்று தான் நினைக்கிறேன்.

இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். டிரைலரைப் பார்க்கும் போது ஈடுபாட்டுடனும், பிடிப்புடனும் இருக்கிறது. ஒரு நல்ல படத்தில் இருந்து தான் இதுபோன்ற டிரைலர் வரும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. இப்படத்தைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். இயக்குனர் மணிபாரதிக்கு சிறப்பான வாழ்த்துகள். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என்றார்.