மிக விரைவில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’

Mani-Ratnam-coatஇயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த இயக்குநர் ணிரத்னம், தற்போது  ‘ஓ  காதல் கண்மணி’ படத்தின் மூலம் மீண்டும் நமது மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார்.

‘ஓ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனிமுத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கைகோர்த்திருக்கிறார் மணிரத்னம்.   ‘மெளனராகம்’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘நாயகன்’, ‘கீதாஞ்சலி’ மற்றும்’அலைபாயுதே’ உள்ளிட்ட படங்களில் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து பணியாற்றி இருக்கிறது.

‘ரோஜா’ முதல்  தொடர்ச்சியாக தனித்துவமான இசையை விருந்தாக்கி வரும் ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னம் கூட்டணி இப்படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.    இக்கூட்டணி இணைப்பில் வெளியாகும்12வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஒ காதல் கண்மணி’ பாடல்களை மணிரத்னத்துடன் எப்போதும் இணைந்து பணியாற்றி வரும் வைரமுத்து எழுதி இருக்கிறார்.

துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் இப்படத்தில் நாயகன் மற்றும் நாயகியாக நடித்திருக்கிறார்கள்.     பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வரும் ‘ஒ காதல் கண்மணி’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் மார்ச் 1ம்தேதி (இன்று) சமூக வலைத்தளத்தில் வெளியாக இருக்கிறது.  இந்த டிரைலர் ஒரு நிமிடம் இருபது வினாடி….

திரை அரங்குகளில் படத்தின் டிரைலர் மார்ச் 6ம் தேதி வெளியாகும்.