‘லிங்கா’ ரகசியங்கள் ! ஒரே படத்தில் பத்துப்பட அனுபவம் :கலை இயக்குநர் அமரன்

அண்மையில் வெளியாகியுள்ள ‘லிங்கா’ படத்தில் ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா போன்ற amaran3cpநட்சத்திரங்ககளைப் போல இன்னொன்றும் பேசப்படுகிறது.

அது படத்தில் இடம் பெறும் அணைக்கட்டு தொடர்பான காட்சிகள். அந்த அணை உருவாகும் காட்சி கதைக்கு மையமாக இருப்பதுடன் பிரமாண்டத்தையும் கண்முன் காட்டுகிறது.

விழிகளை விரிய வைக்கும் அக்காட்சிகளில் வரும் அணைக்கட்டு கலை இயக்குநர் அமரனின் கைவண்ணம். அவரது குழுவினரின் வியர்வையில் விளைந்திருப்பது. படத்தில் உள்ளாதிக்கம் செலுத்தியுள்ள கலை இயக்குநர் அமரனைச் சந்தித்த போது. Sound mind in lean body என்றுதான் சொல்லத்தோன்றியது.இனி அவருடன்..!

லிங்காவுக்கு முன்பு,உங்கள் முன்கதை?

எனக்கு சொந்த ஊர். கோவை திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் பி.ஆர்க் முடித்தேன். பிறகு மும்பை ஐஐடியில் பி.டெக். மாஸ்டர் டிகிரி செய்தேன். சிறப்பு பாடமாக பிலிம் மேக்கிங் எடுத்தேன். அப்போது பிரபல ஆர்ட்டைரக்டர் ஒருவரிடம் ஒரு மாதம் பயிற்சி பெற்று பணியாற்றி ப்ராஜக்ட் செய்யவேண்டும் .அது  ‘ஹேராம்’ , ‘கன்னத்தில் முத்த மிட்டால்’ காலக்கட்டம்.நான் சென்னை வந்து சாபுசிரில் சாரிடம் சேர்ந்தேன். ஒரு மாத பயிற்சி பெற்று மும்பை போய் விட்டாலும் அவர் எனக்கு பிரியமானவராகி வி  ட்டார்.கோர்ஸ் முடிந்து சாபு சாரிடமே உதவி யாளராகச் சேர்ந்து விட்டேன். ‘பஞ்சதந்திரம்’ ,இந்தி ‘குஷி’ உள்பட இந்தியில் சிலபடங்கள் உதவி யாளராகச் செய்தேன்.
அப்பறம் வெளியே வந்துவிட்டேன். என் மீது அவருக்கு என்றுமே  அன்பு உண்டு.ஒருநாள் பிரியதர்ஷனின் ‘லேசா லேசா’ படத்தின் க்ளாஷ் ஒர்க்கிற்காக சாபுசார் கூப்பிட்டார்.போனேன் செய்தேன்.

என் முதல் படம் ‘சித்திரம் பேசுதடி’ தொடர்ந்து ‘அஞ்சாதே’ ‘யுத்தம் செய்’ ‘நந்தலாலா’ என நாலுபடங்கள் மிஷ்கின் சாரிடம் பணி புரிந்தேன்.

இப்படி 10 படங்கள்செய்திருக்கிறேன். இப்போது ‘லிங்கா’ வந்திருக்கிறது. இந்த  ‘லிங்கா’ என்கிற ஒரு படஅனுபவமே 10 படங்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்தைக் கொடுத்துள்ளது.

art-amaran1லிங்கா வாய்ப்பு எப்படி வந்தது?

என் குருநாதர் என் நலம் விரும்பி சாபுசிரில் சார் அழைத்து கொடுத்ததுதான் இந்த வாய்ப்பு. கே.எஸ்.ரவிகுமார் சாரின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ஏற்கெனவே பணியாற்றியவன் நான் பத்து ஆண்டுகளுக்குப்பிறகு அவர் படத்தில் ஆர்ட்டைரக்டராக வாய்ப்பு.

படத்தில் பேசப்படும் அந்த அணைக்கட்டு அமைக்க அனுபவம் பற்றி..?

என்னை ரவிகுமார் சாருக்கு முதலிலேயே தெரியும். இருந்தாலும் அவருக்குள் சந்தேகம் இருந்திருக்கக் கூடும்.அவர்  என்னை கமிட் செய்த அப்போது கேட்டார். இவன் ரொம்ப அமைதியான பையனாச்சே. இவ்வளவு பெரிய வேலையை இவ்வளவு நாட்களுக்குள் முடிப்பானா வேலை வாங்குவானா என்று கேட்டார்  கொஞ்சம் சந்தேகப்பட்டார்.

நான் அவ்வளவு பெரியவேலையை என் குழு வினருடன் பதினைந்து நாட்களில் முடித்துக் காட்டினேன். ஏப்ரல் 14ல் தொடங்கினோம் மே 2ல் படப்பிடிப்பு தொடங்கியது. அது பெரிய சவால்தான் மிகவும் குறைந்த கால அவகாசம். ஆனாலும் ஆயிரம் தொழிலாளர்களுடன் இரவு பகல் என்று பணி யாற்றி முடித்துக் காட்டி னோம்.

இது ஒரு செட் போட்டு விட்டு அப்படியே அதில் படமெடுக்கும் படியான நடைமுறையில் எடுக்கப்பட வில்லை. அப்படி ஒரு செட்டாக அமைக்கப் படவும் இல்லை.அப்படி ஒரு செட்டாக  அமைத்தால் பல  நாட்கள் இழுக்கும்.படிப்படியாக கட்டி வளர்வது போல உருவாக்க வேண்டும். இதற்கு நாங்கள் நாங்கள் கட்டி வளர்வது போல செய்யாமல் கட்டி முடிக்கப்பட்டதை பிரிப்பது போல ரிவர்ஸில் செய்தோம் அப்படி செய்வதால் கால விரயம் தடுக்கப்படும் இன்னும் நேரம் மிச்சமாகும்.

நாங்கள் கட்டிப் பிரித்த அணையை படத்தில் நீங்கள் படிப்படியாக கட்டப்படுவதாக தலைகீழாகப் பார்ப்பீர்கள்.

அந்த அணை எங்கு உருவானது?

ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில்தான்  அணை செட் போட்டோம். அதற்கு ஷிமோகாவிலுள்ள ‘லிங்கனமகி’ டேமை மாடலாக முன் மாதிரியாக வைத்துக் கொண்டோம் அங்கும் அதே மாதிரி ஒரு கோயில் இருக்கும் பாடலுக்கான இன்னொரு செட் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் போடப்பட்டது. அங்கே ஏரி ஒன்று இருக்கும் அதையும் பின்னணியாக வைத்து ஒரு செட் போட்டோம்.

art-dtr-amaran-gropசெட்டில் அளவு என்ன,?

படத்தில் இரண்டரை கிமீ. நீளத்தில் அணை  தெரியும் ஏனென்றால் லிங்கனமகி டேம் இரண்டரை கிமீ. நீளத்தில்தான் இருக்கும் நாங்கள் 300 அடி போட்டோம். உயரம் 50 அடி இருக்கும்.

படத்தில் காட்சிகளை பின்னிருந்து முன்னாக திருப்பி எடுத்ததால் முதல்நாள் நாளைக்கு என்ன எடுக்கப் போசிறோம் என்பதை இயக்குநர் சொல்லி விடுவார். விடியவிடிய ஆயிரம் அட்கள் பிரிப்போம். மறுநாள் படப்பிடிப்பு நடக்கும் படத்தில் கட்டுவது போலத் தெரியும் காட்சியில் ஒருபுறம் பிரித்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் தொழில் ரகசியம்.

1930 களில் நடக்கும் கதை என்பதால் அப்போதைய கல்.  மர க்ரேன் போன்றவற்றை எல்லாம் சரிபார்த்தே இதை யெல்லாம் உருவாக்கினோம் அதே செட்டை 70 ஆண்டுகள் கழித்து தொன்றும்படி பழையதாக மாற்ற வேண்டும். இதை இரண்டே நாளில் செய்து முடிக்க வேண்டும். முடித்தோம்.

வேறு என்னென்ன செட் போடப்பட்டது?

டேம் செட் பெரிய வேலைதான் அது மட்டுமல்ல வேறு பெரிய செட்களும் போடப்படடன. 2 பாடல் காட்சிகளுக்கு செட் போட்டோம். ‘உண்மை ஒருநாள் வெல்லும்’ பாடல் உள்படரயில்வே ஸ்டேஷன் , ரயில்வே ட்ராக் அந்த பழையகாலத்து ரயில் என்ஜின் எல்லாம் நாங்கள் உருவாக்கியவைதான் ரயில்வே ஸ்டேஷன் செட் போடும் இடத்தில் அங்கு நாங்கள் எதிர்பாராத வயையில் பெரிய ஆலமரம் இருந்தது. அது எங்கள் செட்டை இயல்பானதாக மாற்றி விட்டது.

amaran-family-rsசெட் பற்றி ரஜினி என்ன கூறினார்?

செட்பற்றி ரஜினி சார் கூறியதைவிட அதைப்பார்த்து அவர் கண்கள் முதலில் பேசின. எப்போதும் செட்டை வந்து பார்த்துவிட்டு ஒரு பார்வை விடுவார் அதில் திருப்தி தெரியும்.அதைப்பார்த்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்  .அது மட்டுமல்ல நேரில் வந்தும்  ‘ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க’ என்று பாராட்டினார்.

ரவிக்குமார் சாரும் ‘படப்பிடிப்பில் நான் அதிகம் திட்டியது ஆர்ட் டிபார்ட்மெண்டைத்தான் இப்போது பாராட்டை தட்டிச் செல்வதும் ஆர்ட் டிபார்ட் மெண்ட்தான்’என்றார் அவர் மிகவும் தெளிவான இயக்குநர். தனக்கு எது தேவை என்பதில் மிகவும் தெளிவாக இருப்பவர் அதனால் நேர நெருக்கடி அடிக்கடி எதிர்பாராத மழை என்கிற சவால்கள் இருந்தாலும் எங்கள் வேலையை சரியாகச் செய்ய முடிந்தது.

ரஜினிசாரின் ஊக்கம், ரவிகுமார் சாரின்தெளிவான திட்டமிட்டல் ,சாபுசிரில் சாரின் வழிகாட்டல் எல்லாம் நான் சிறப்பாகச் செய்ய உதவியது. ஒளிப்பதிவாளர்  நண்பர் ராண்டி தன் திறமையான ஒளிப்பதிவின் மூலம்  என் பணியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

ரஜினியிடம் வியந்தது.?

படத்தில்  லலிதா ஜூவல்லரி செட்டில் பந்து வீசி திரும்பி வரும்படியான ஒரு காட்சி  வரும்.அப்போது அங்கு வந்த ரஜினிசார் அந்த லைட் க்ளாஸ் பந்து வீசினால் தாங்குமா என்றார். நாங்கள் அதன்பிறகு அவருக்குத் தெரியாமலேயே தடித்த கண்ணாடிலைட்டாக மாற்றிவிட்டோம். அவர் ஒரு பெரியநடிகர் செட்டில் உள்ள பொருட்களைக் கூட எப்படி உன்னிப்பாகக் கவனிக்கிறார் என்று ஆச்சரியம் பட்டோம்.

மிஷ்கினிடம் பணியற்றிய அனுபவம் எப்படி?

அவரிடம் நாலு படங்கள் செய்தேன். நல்ல ரசனையான இயக்குநர் .தெளிவானவர். அதே நேரம் நாம் செயல்பட சுதந்திரம் தருவர். நான் அவரிடம் முழு திரைக்கதை கேட்பேன் பைண்டட் ஸ்கிரிப்டைத் தருவார். எது சரி எது தவறு என்று கேட்பார். தவறு என்று கூறினால் ஏன் என்று காது கொடுத்து கேட்பார்.  சொன்னால் எடுத்துக் கொள்வார் ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் வில்லன் தேங்காய்  மண்டி வைத்திருப் பவனாகத்தான் கதை எழுதி இருந்தார். நான் அதை வாழைக்காய் மண்டியாக மாற்றியால் நன்றாக கலர் புல்லாக வரும் என்றேன். 50 தார்கள் , 2 லாரி சில வாழை இலைக் சருகு குப்பைகள் என்று வாங்கினோம் பயன் படுத்தினோம். சருகின் ஒலியும் கூட படத்தில் பிரமாண்டமாகத் தெரிந்தது.

இப்போது ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தில் பணி புரிந்து கொண்டிருக்கும் அமரன் ,பலதரப்பட்ட இயக்குநர்களிடமும் ஒளிப்பதிவாளர்களிடமும் பணிபுரிந்து  இருந்தாலும் மேலும்  பல தேடல் அனுபவங்களைப் பெற பல்வேறு புதிய இயக்குநர்களிடம்  பணி புரிய விரும்புகிறார்.