‘விஜயானந்த்’ விமர்சனம்

தனது  விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை சார்ந்த  தொழில்களில் முன்னேறிய
வி ஆர் எல் என்ற
ஒரு வியாபார சாம்ராஜ்யத்தின் தலைவர் அதிபர் பற்றிய பயோபிக் படம் தான் இது.இது ஒரு தனிப்பட்ட நபரின் வரலாறாக இல்லாமல் அவரது  குடும்பம், தொழில், சமூகம் ,அரசியல், நாட்டு நடப்பு, மக்கள் நிலை, வியாபார எதிரிகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக கதை  அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சங்கேஷ்வராக நிஹால்,
லலிதா சங்கேஷ்வராக கிரி பிரகலாத், பி.ஜி.
சங்கேஷ்வராக ஆனந்த் நாக்,சந்திரம்மாவாக வினயா பிரசாத்,ஆனந்த் சங்கேஷ்வராக பாரத் போபனா,
வாணி சங்கேஷ்வராக
அர்ச்சனா கொட்டி கே என நடிப்புக் கலைஞர்கள் பாத்திரமேற்று நடித்துள்ளனர்.

தயாரிப்பு டாக்டர் ஆனந்த்
சங்கேஷ்வர்.எழுத்து இயக்கம் ரிஷிகா சர்மா, ஒளிப்பதிவு கீர்த்தன் பூஜாரி, இசை கோபி சுந்தர், எடிட்டிங் ஹேமந்த் குமார் ,தயாரிப்பு வி ஆர் எல் பிலிம் புரொடக்ஷன்ஸ்.

பொதுவாகப் பயோபிக் படம் என்றால் அதில் ஒரு ஆவணத்தன்மை வந்து விடும் .அதே நேரம் செயற்கையாக காட்சிகள் அமைத்தும் அவர்களது வரலாற்றைத் திரித்து எழுத முடியாது .இந்த இரண்டு  நிர்பந்தங்களை எதிர்கொண்டு சுவாரஸ்யமாகவும் பார்வையாளர்களைக்  கட்டுக்குள் வைத்திருந்து பார்க்க வைக்கும்படியாகவும் ஒரு படமாக உருவாக்குவது என்பது மிகவும் சவால் ஆனது. அந்தச் சவாலை  இலகுவாக எதிர் கொண்டு மிக அருமையான சுவாரஸ்யமான ஒரு முழு நீள திரைப்படமாக இயக்கி உள்ளார் பெண் இயக்குநர் ரிஷிகா சர்மா .இவரது தாத்தா ஜீவி ஐயர் தேசிய அளவில் புகழ் பெற்ற இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணத் தன்மை கொண்ட கதையைப்படமாக எடுத்து அதில் பார்ப்பவர்கள் கற்றுக்கொள்ள ஏராளமான பாடங்களை உள்ளடக்கி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.படத்தில் சிறிய வட்டத்துக்குள் பாதுகாப்பாக ஆடினால் போதும் என்று நினைக்கும் சிறிய தொழிலதிபரான தந்தையை மீறி பெரிய வட்டத்திற்குள் பெரிய மைதானத்தில் வியாபாரத்தில் ஆட நினைக்கும் மகனின் கனவும் அது சார்ந்த தந்தையின் பார்வையும் சொல்லப்பட்டுள்ளது.உள்ளதைக் கொண்டு நல்லது செய்யலாம் என்கிற தந்தைக்கும் பெரிதினும் பெரிது கேள் என்று விஸ்தாரமாகச் சிந்திக்கும் மகனுக்கும் இடையேயான சின்ன முரண் அழகாகப் பதிவாகியுள்ளது.

எந்தத் தொழிலிலும்  போட்டிகளும் சவால்களும் எதிர்கொள்ள வேண்டி இருப்பதையும் அதை எப்படி சமாளிப்பது என்பதையும் தத்ரூபமான காட்சிகள் மூலம்
காட்டப்பட்டுள்ளது.
அப்பா தந்தை பற்றிய உறவு பற்றி
இதில் அருமையாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இடையே நிகழும் உரையாடல்களும் மிக உணர்ச்சிகரமானவை. காதால் கேட்கும் வசனங்கள் குறைவாக இருந்தாலும் மனதால் உணரக்கூடிய உணர்வுகள் அதிகம்.

நாயகனின் தந்தைக்கு ராதாரவி குரல் கொடுத்திருக்கிறார். தனது குரல் மூலம் அந்த பாத்திரத்தை மேலும் ஒளி பெறச் செய்துள்ளார்.

உணர்ச்சிகரமான காட்சி சந்தர்ப்பங்களும் செறிவான அழகான வசனங்களும் இடம்பெற்றுள்ளது சிறப்பு. இந்த வசனங்களை மதுரகவி எழுதியுள்ளார். கருத்தும் உயிரோட்டமும் நிறைந்த வசனங்கள் யார் இவர் என்று கேட்க வைக்கின்றன.வார்த்தைகளில் தன்னம்பிக்கை தெறிக்கிறது.

மொத்தத்தில் இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். ஒரு துளி ஆபாசக் காட்சிகளோ, சித்தரிப்புகள் இல்லாமல் முழு நீள தரமான படமாக உருவாகி உள்ளது.

டூயட் பாடல்கள் அர்த்தமில்லாத சண்டைக் காட்சிகள் நிறைந்த மசலா குப்பைகள் நடுவில் இந்த படம்  தனித்து நிற்கிறது. தரமான படமாக அமைந்து இருக்கிறது. நிச்சயமாகப்
படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்தலாம்.