நடிகை ரோஜா வெளியிட்ட ’மாயத்திரை’ படப் பாடல் !

ஏற்கெனவே கதாநாயகனாக பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி  படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு …

நடிகை ரோஜா வெளியிட்ட ’மாயத்திரை’ படப் பாடல் ! Read More

‘மிருகா’ விமர்சனம்

ஒரு மனிதன் மிருகமாக மாறிக் குற்றச் செயல்கள் செய்வது பற்றிய கதை.ஸ்ரீகாந்த்,ராய் லட்சுமி பிரதான வேடமேற்க ஜெ.பார்த்திபன் இயக்கியுள்ளார். பணக்கார விதவை பெண்களை நல்லவன் போல் நடித்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களின் சொத்துக்களை அனுபவிப்பது, தன் மீது சந்தேகம் …

‘மிருகா’ விமர்சனம் Read More

போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “

முகேஷ் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் முகேஷ் தயாரிக்கும் படம் ” சல்பர் ” யாஷிகா அனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்து, முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார்.மற்ற நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இயக்குனர் வடிவுடையானிடம் உதவியாளராக பணியாற்றிய புவன் இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு  – இனியன் ஜே ஹாரிஸ். இவர் கன்னிமாடம், பாம்பாட்டம் போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் யாஷிகா அனந்த் முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் விபின் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னையில் ஓர் காவல் நிலையத்தில் SI ஆக பணியாற்றுகிறார் நாயகி பாரதி. அங்கே எதிர்பாராத விதமாக ஏற்படும் சிக்கலால் பணியிடை மாற்றம் பெற நேரிடுகிறது. தான் மிகவும் நேசித்த crime department-ல் இருந்து காவல்துறைக்கட்டுபாட்டு அறைக்கு பணி மாற்றமாகிறார். தன் திறமைக்கு இங்கே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை என அவள் நினைத்து சாதாரணமாக தன் வேலையை தொடர்கையில், ஒருநாள் மாலை கட்டுபாட்டு அறைக்கு ஓர் அழைப்பு வருகிறது. எதிர்முனையில் பேசும் பெண் தான் இன்னும் சில மணி நேரங்களில் இறந்துவிடுவேன், என்னை நிச்சயம் கொன்றுவிடுவார்கள் என சொல்ல, ஆரம்பத்தில் அந்த கால் frank என பாரதி நினைக்க, பின்புதான் பாரதிக்கு அந்த வழக்கின் தீவிரம் புரிகிறது.பின் அந்த வழக்கை பாரதி எப்படி எதிர்கொண்டாள் என்பதை “ஆக்‌ஷன்-திரில்லர்” கலந்த்து திரைக்கதை  வடிவமைக்க பட்டிருக்கிறது.

போலீஸ் வேடத்தில் யாஷிகா ஆனந்த் நடிக்கும் ” சல்பர் “ Read More

டூப் போடாமல் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்!

” தீ இவன் ”  படத்திற்ககாக டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக் மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத்  படத்தை தயாரித்தவருமான  டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா,  ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மறைந்த குணசித்திர நடிகர் பெராரே முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். செய்கிறார். படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது: லீ இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்த தலைமுறைக்கு தரும் படமாக இது உருவாகி உள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும், சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரை விட மானம் பெரிது என்பதுதான தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம் அதை உணர்த்தும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட  படப்பிடிப்பு  நடந்து வருகிறது.  ஒரு பாடல் காட்சி பிரபல பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்க இருக்கிறோம். இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் பல சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார். இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்த காட்சிகளை நடிக்க தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். அந்த சண்டைகாட்சிகள் படத்தில் பிரமாண்டமாக இருக்கும். அது மட்டுமல்லாது ஹம்மர் என்ற விலையுர்ந்த கார் ஒன்றை வைத்து  பாடல் காட்சி ஒன்றை ஹாலிவுட் தரத்தில் எடுத்துள்ளோம் அதுவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. இந்த படம் வெளியானபிறகு நடிகர் கார்த்திக் மீண்டும் பல படங்களில் நாயகனாக  நிச்சயம் நடிப்பார். 500 பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டி ஒன்றை  பிரமாண்டமாக அண்மையில் படமாக்கினோம். கொரோனா காலம் என்பதால் பள்ளி மாணவர்களை சமூக இடைவெளியுடன் நடிக்க வைத்து படமாக்கி இருக்கிறோம். மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகி உள்ளது. ஓடிடி தளங்களில் இருந்து பேசினாலும், படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் என்கிறார் படத்தின்  இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன்.

டூப் போடாமல் பல சாகசங்களை செய்த நவரச நாயகன் கார்த்திக்! Read More

பெண்கள் தினத்தை முன்னிட்டு “பெண்” என்கிற தலைப்பில் குறும்படப் பாடல்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு “பெண்” என்கிற தலைப்பில் குறும்படப் பாடல் ஒன்று வெளியாகிவுள்ளது.  வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றிய P.T தினேஷ் இப்பாடலை இயக்கியுள்ளார். இப்பாடலில் வளர்ந்துவரும் பிரபல முன்னனி பாடலாசிரியர் அருண்பாரதி  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் விஸ்வாசம், அண்ணாதுரை, சண்டக்கோழி2, திமிருபுடிச்சவன், …

பெண்கள் தினத்தை முன்னிட்டு “பெண்” என்கிற தலைப்பில் குறும்படப் பாடல்! Read More

இயக்குநர் எஸ். ஜே .சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் சிங்கிள் ஷாட் ஸ்னீக் பீக் வீடியோ !

உலகெங்கும் தேவதைக் கதைகளில் வலம்வரும்  புகழ்பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’ . இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் எஸ் .ஜே .சூர்யாவிடம் பணிபுரிந்து …

இயக்குநர் எஸ். ஜே .சூர்யா வெளியிட்ட ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் சிங்கிள் ஷாட் ஸ்னீக் பீக் வீடியோ ! Read More

சந்தோஷ் நாராயணன், அறிவு , தீ கூட்டணி யாராலும் மிஞ்ச முடியாத அழகான கூட்டணி:இயக்குநர் சுதா கொங்குரா

ஏ ஆர் ரஹமான் புதிதாக உருவாக்கியுள்ள,   தெற்காசிய சுயாதீன கலைஞர்களின் குரலை உலக மேடைகளில் கொண்டு சேர்க்கும் புதிய தளமான   “மாஜா” தளத்தின்  முதல் பாடலாக “என்ஞாய் எஞ்சாமி” ( Enjoy Enjaami ) பாடல் இன்று தீ …

சந்தோஷ் நாராயணன், அறிவு , தீ கூட்டணி யாராலும் மிஞ்ச முடியாத அழகான கூட்டணி:இயக்குநர் சுதா கொங்குரா Read More

எதிர் கருத்துகளே வெற்றிப்பட சினிமாக்களை உருவாக்கும்: இயக்குநர் சேரன் !

எழில்பாரதி எழுதிய செம்பீரா – சிறுகதைகள், குறுநாவல் தொகுப்பு மற்றும் ஆயுதம் வைத்திருப்பவன் கவிதைகள் தொகுப்புகளின் வெளியீட்டு விழா சென்னை, தி.நகர், வினோபா அரங்கில் நேற்று மாலை நடந்தது. முனைவர் பூ.சீனிவாசன் வரவேற்றுப் பேச, பத்திரிகையாளர் ஆர்.சி.ஜெயந்தன் தொகுத்து வழங்க, த.மு.எ.க.ச.,வின் …

எதிர் கருத்துகளே வெற்றிப்பட சினிமாக்களை உருவாக்கும்: இயக்குநர் சேரன் ! Read More

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிருஷ்டி டாங்கே

ஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி. விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு …

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிருஷ்டி டாங்கே Read More

நார்வே திரைப்படவிழா: படைப்பாளிகளுக்கு அழைப்பு!

ஆண்டுதோறும் நார்வே நாட்டில்  சிறப்பாக நடைபெறும் திரைப்பட விழாவுக்கு அதனை  ஒருங்கிணைக்கும் வசீகரன் சிவலிங்கம் அழைப்பு விடுத்து ஊடகங்களுக்கான   அறிக்கை வெளியிட்டுள்ளார். தனது அறிக்கையில் வசீகரன் சிவலிங்கம் கூறியிருப்பதாவது: அனைத்து ஊடக நண்பர்கள், படைப்பாளிகளுக்கும் வணக்கம்,12-வது நோர்வே தமிழ்த் திரைப்பட …

நார்வே திரைப்படவிழா: படைப்பாளிகளுக்கு அழைப்பு! Read More