‘மயில் ‘சிறகொடிந்தது : ஸ்ரீதேவி மறைவு!

தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக அறியப்பட்ட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால்  காலமானார். 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் –ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தஸ்ரீதேவி தனது  நான்கு வயதிலேயே ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘கந்தன் கருணை’ திரைப் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு வெளியான அப்படம் தெலுங்கு, கன்னடம்  மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும்குழந்தைநட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை இவருக்குப்  பெற்றுத் தந்தது. அதைத்  தொடர்ந்து பல படங்களில் குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் வெற்றி படமாக அமையவே  இவரது சினிமாவாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழியிலும் இவர் கதாநாயாகியாக உயர்ந்தார்.முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும், முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் அவர்இருந்தார்.  பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின்மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை என அவரது புகழ் உயர்ந்து பறந்தது. பதினாறு வயதினிலே படத்தில் அவர் ஏற்ற மயில் பாத்திரம் பரவலான பாராட்டைப்பெற்று இன்றளவும் பேசப்படும் பாத்திரமாகும். இந்தியிலும் வாய்ப்பு வரவே ,இந்திக்கும் சென்றார். முதல் படம் “சோல்வா சாவன்” தோல்வியைதழுவினாலும், இரண்டாவது வெளியான “ஹிம்மத்வாலா” மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.இந்தி திரைப்பட உலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் திருப்புமுனையையும் பெற்று தந்தபடம். அதன் பிறகு மூன்றாம் பிறை மீண்டும் “சத்மா” என்கிற பெயரில் உருவான போது அதிலும்நடித்தார். அதில் இவருக்கு பெரும் புகழும் பாராட்டும் கிடைத்தது. அதைத் தாண்டி,இன்றளவும் பல நடிகைகளுக்கு முன் மாதிரி படமாக திகழ்கிறது.  அதன் பிறகு தொடர்ந்துஇந்தியில் இருபத்தி ஐந்து படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். …

‘மயில் ‘சிறகொடிந்தது : ஸ்ரீதேவி மறைவு! Read More

என் ‘கரு’ படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி : இயக்குநர் விஜய்!

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘கரு’.   சாய் பல்லவி, நாக சௌர்யா நடிப்பில், நிரவ் ஷா ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் …

என் ‘கரு’ படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி : இயக்குநர் விஜய்! Read More

ஆர்கேவின் புதிய கண்டுபிடிப்பு : விவேக் ஓபராய் கலந்துகொண்ட அறிமுக விழா!

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக ,தயாரிப்பாளராக அறியப்படுகிற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற …

ஆர்கேவின் புதிய கண்டுபிடிப்பு : விவேக் ஓபராய் கலந்துகொண்ட அறிமுக விழா! Read More

கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் !

சூர்யா தயாரிப்பில் 2D Entertainment நிறுவனம் சார்பில்  பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “ கடைக்குட்டி சிங்கம் “. முதல் முறையாக அண்ணன் சூர்யா தயாரிக்க தம்பி கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக சாயிஷா மற்றும் ப்ரியா பவானி …

கடைக்குட்டி சிங்கம்“ படத்தின் ரிலீசுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் ! Read More

‘பதுங்கி பாயணும் தல ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா!

மீடியா பேஷன் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் மூலம் ஆமீனா ஹுசைன் தயாரிக்கும் புதிய படம் “பதுங்கி பாயணும் தல” இந்த படம் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கிறது .படத்தின் அறிமுக இயக்குநர் S.P.மோசஸ் முத்துப்பாண்டி அவர்கள் …

‘பதுங்கி பாயணும் தல ‘படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா! Read More

பெண் கொடுமைக்கு எதிரான படம் ‘ தமிழனானேன்’

தமிழனின் தவறான மனப்போக்கால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்து வருகின்றன. அதனை அன்றைய ஆதித்தமிழன் எதிர்கொண்டால் எப்படி அணுகுவான்? அதற்குத் தீர்வு காண எப்படி நடந்து கொள்வான்? என்பதைப் பேசும் படம் தான் ’தமிழனானேன்’ புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படம் ‘தமிழனானேன்’. …

பெண் கொடுமைக்கு எதிரான படம் ‘ தமிழனானேன்’ Read More

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி !

 தமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது “தண்ணீர்” தான். கேரளத்தோடு முல்லை பெரியாறு, ஆந்திராவோடு பாலாறு, கர்நாடகத்தோடு காவிரி என அரை நூற்றாண்டு காலமாய் தண்ணீருக்காக வழக்காடிக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. ஏரி குளங்கள் மாயமாவதும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருப்பதும் …

தமிழகத்தின் தலையாய பிரச்சினையைப் பேசும் கேணி ! Read More

ஊடகங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் நன்றி!

ஊடகங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார்  பின் வருமாறு நன்றி கூறியுள்ளார்! அன்புடைய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு, வணக்கம். திரையுலகில் இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருந்த எனக்கு நாயகன் அந்தஸ்து கொடுத்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த …

ஊடகங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் நன்றி! Read More

புது நடிகருடன் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி!

‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் சுபா தம்பி பிள்ளை தயாரித்துள்ள படம் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’. ஏஆர் ரெஹானா இசையமைத்து, படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். புதுமுகம் அசார், சஞ்சிதா …

புது நடிகருடன் ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி! Read More

தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!

  தன்னுடைய கடும் உழைப்பு மற்றும் பணிவான குணத்தால் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று பல நடுத்தர குடும்ப இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக மாறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்புத் துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். பால்ய காலத்தில் …

தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்! Read More