நாயகன் செங்குட்டுவனின் பெற்றோர்களான நரேன்-ஷர்மிளா ஆகியோர் தங்கள் மகன் மீது மிகுந்த பாசம் வைத்து இருக்கிறார்கள். அவன் எது கேட்டாலும், அதை தட்டாமல் அவனுக்கு செய்து கொடுத்து வருகிறார்கள். செங்குட்டுவன் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து நற்பணி மன்றம் மூலமாக ஊருக்கு பல நன்மைகளை செய்து வருகிறார். மன்றத்தின் உறுப்பினர் ஒருவருடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பவே, அந்த எதிர்ப்பையெல்லாம் மீறி அவருக்கு திருமணம் செய்துContinue Reading

நள்ளிரவு நேரத்தில்  ஒரு பஃப்.. குடியும் கும்மாளமாக இருக்கிறது .சற்று நேரமானதும் கூட்டம் கலைகிறது. ஒருத்திமட்டும் போதையில் தடுமாறித் திணறிக் கொண்டிருக்கிறாள். அவள் மீது பஃப்பில் வேலைசெய்யும் ஜான்,உசைன் இருவருக்கும் கண் .அவள் கழிவறை செல்கிறாள். தேடிப் போகிறார்கள் அங்கே  அவள் கீழே விழுந்து கிடக்கிறாள். இறந்து விட்டாளோ என்று நினைக்கிறார்கள். ஆனால் இறக்கவில்லை. தூக்கிக் கொண்டு வந்து போடுகிறார்கள். அவள்தான் சாரு. மயக்கம் தெளிந்தவள் ‘என்னை உங்களில் யாரோContinue Reading

ஒரு தூக்கு தண்டனைக் கைதி,தூக்கு போடும் தொழிலாளி, சிறைத்துறை அதிகாரி, மறைமுக இயக்கம் இவற்றை வைத்து பின்னப்பட்ட கதைதான் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை.’ இந்தியாவில் உலகநாடுகள் சேர்க்கும் குப்பைகளுக்கு எதிராகப் போராடுகிறார் ஆர்யா. அதற்காக இயக்கம் நடத்துகிறார்.அரசை எதிர்க்கும்  அவர் மீது அதிகார வர்க்கம் பல குற்றச் சாட்டுகள் சுமத்தி தூக்கு தண்டனை விதிக்கிறது. அவரை விரைவில் தூக்கிலிட ‘ஹேங்மேன்’ விஜய் சேதுபதியை சிறை அதிகாரி ஷாம் அணுகி ஏற்பாடுசெய்யContinue Reading

படத்தில் கிஷோர் பேசும் வசனம் ‘கக்கத்துல அருவாளும் கழுத்துக்குப் பின்னால பகையும் வச்சிக்கிட்டு வாழ்ந்த வாழ்க்கை நம் பாட்டன் பூட்டன் காலத்தோடு போகட்டும்ல நமக்கு வேணாம் ல ‘-இந்த வசனம்தான் படம் கூறும் செய்தி. வன்முறை இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் அது எதிரியையும் அழிக்கும். எடுத்தவரையும் அழிக்கும். என்கிற கருத்தை ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கும் படம்தான் ‘திலகர். இப்படத்தை பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வி.மதியழகன். ரம்யா,நாசேContinue Reading

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தெலுங்கிலேயே வெளியாகி  தமிழ்நாட்டிலேயே பெரிய வெற்றி பெற்ற படம் ‘சங்கராபரணம்’.இது இப்போது  தமிழில் மொழிபெயர்ப்பாகி மெருகூட்டப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது.இந்த வெளியீட்டிலும்வெற்றிவிழாவைக்  கொண்டாடும் என்று எதிர்பார்க்கலாம். இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழில் மொழிபாற்றுப் படமாக உருவாக்கும் அளவுக்கு வீரியமும் செறிவும் இருந்துள்ளது தான் சங்கராபரணம்’ படத்தின்சிறப்பு.அப்போது சிறந்த இயக்குநராக கே.விஸ்வநாத்துக்கும், சிறந்த இசையப்பாளராக கே.வி.மகாதேவனுக்கும், சிறந்த பின்னணிப் பாடகர் மற்றும் பாடகியாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராமுக்கும்Continue Reading

ஜெயகுமார் என்கிற ஜேகே ஓடி ஓடி உழைக்கிறான். நண்பர்களை நாக்கு தள்ள தன் பின்னே ஓடி உழைக்க வைக்கிறான். ரியல் எஸ்டேட் முதல் பொக்கே ஷாப் வரை.புதிது புதிதாக தொழில் தொடங்கி ஜெயிக்கிறான். பணத்தை இப்படி துரத்துவது ஏன் என்று குடும்பமும் காதலியும் தவிக்க  தன் முன்கதையை காதலியிடம் கூறுகிறான்.ஆரம்பத்தில் ஜெயகுமார் என்கிற ஜேகே வழக்கமான சினிமா இளைஞர்கள் மாதிரி ஜாலி, நண்பர்கள், கூத்து என்றிருக்கிறான். ஒருநாள் புத்தாண்டு பார்ட்டிக்குContinue Reading

மக்கள் பாசறை சார்பில் ஆர்.கே.  மீனாட்சி தீட்ஷித் ,பூனம்கவுர் நடித்துள்ள படம். “எல்லாம் அவன் செயல்” படத்துக்கு பின் ஆர்.கே.ஷாஜி கைலாஸ் கூட்டணியில் வந்துள்ள படம். இசை ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு ராஜரத்னம். ஆர்.கே. ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் .தன்னுடன் இளவரசு, தலைவாசல் விஜய்,மீனாட்சி தீட்ஷித்தைச்  சேர்த்துக் கொண்டு சமூக விரோதிகளை களையெடுத்துச் சுட்டுப் பொசுக்கி வருகிறார். அந்தச் சமூக விரோதிகளில் அரசியல்வாதிகள். காண்ட்ராக் டர்கள் மட்டுமல்ல போலீஸ் அதிகாரிகளும்Continue Reading

நியூசிலாந்தில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்து சிறுவர்கள் கோடை விடுமுறையில் கூடி விளையாடுவது வழக்கம். நட்பாகிறார்கள். கால வெள்ளத்தில் பிரிகிறார்கள். அவர்களில் ஒருவன் கொலை செய்யப் படுகிறான். நாயகன் போன்ற  ஒருவன் ஒருத்தியைக் காதலிக்கிறான் அவளோ அவனைத் தவிர்க்கிறாள், இன்னொருத்தி அவனைக் காதலிக்கிறாள்.  அந்த ஒருவன் கொலை தொடர்பாக நாயகன்  மீது சந்தேகம் வருகிறது. யார் கொலை செய்தது? எந்தக் காதல் வென்றது? என்பதுதான் சேர்ந்து போலாமா படத்தின் முடிவு. நியூசிலாந்தில்Continue Reading

இதுவரை காமெடி கலந்த நாயகனக வலம் வந்த சிவகார்த்திகேயன் ,ஆக்ஷன் நாயகனாக முயன்றுள்ள படம் ‘காக்கிசட்டை’ இன்ஸ்பெக்டர் கனவிலிருக்கும் சிவகார்த்தி கேயன் சாதாரண கான்ஸ்டபிளாகவே வர முடிகிறது. வேலைக்குச் சேர்ந்த புதிதில் அநீதி கண்டு பொங்குகிறார். ‘உனக்கு பொங்குவதற்கு உரிமையில்லை. மேலதிகாரி இட்ட வேலையை பணிந்து பணியாற்றுவது தான் உன்வேலை ‘என்று அவமானப் படுத்தப் படுகிறார். அநியாயமாக ஒரு கேஸ் திசைமாறுவதைக் காண்கிறார். \பெரிய கேஸை ஆதாரத்துடன் பிடி பிறகுContinue Reading

பாலைவன சொர்க்கம் என்று கருதப்படும் துபாய்க்கு செல்கிற இளைஞர்கள் பிரச்சினையில் சிக்கி நரகம் அனுபவிப்பதை சொல்ல முயன்ற கதைதான் மணல் நகரம். டிஜேஎம் அசோசியேட்ஸ் தயாரித்துள்ளது. ஒருதலைராகம் சங்கர் இயக்கியுள்ளார். பிரஜின், தனிஷ்கா, கௌதம் கிருஷ்ணா, வருணா ஷெட்டி நடித்துள்ளனர். துபாயிலிருக்கும் பிரஜின் இந்தியாவிலிருக்கும் கௌதமைக் கூப்பிட்டு வேலை கிடைக்க உதவுகிறார். போன இடத்தில் வேலையை மட்டும் பார்க்காமல் ஒரு ஓட்டலில் வேலைபார்க்கும் தனிஷ்காவுடன் நட்பாகிக் காதலிக்கிறார். பிரஜின். வேலைContinue Reading