புகைப்படத் துறையில் சடோரி ஸ்டுடியோவின் புதிய முயற்சி!

satori1புகைப்படத் துறையில் தனக்கென்று ஒரு பிரத்யேகமான  பெயரை ஈட்டி உள்ள  சுபாஷினி வணங்கா முடியின் சடோரி ஸ்டுடியோஸ் பல்வேறு தலைப்புகளில் வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக நேற்று குழந்தைகளை தலைப்பாக வைத்து நீருக்கடியில்’under water’ போட்டோ ஷுட் ஒன்றை செய்து 2016 ஆம் ஆண்டின்  காலண்டராக வெளி யிட்டனர். இயக்குநர் சிகரம் பாரதிராஜாவுடன் , சிம்ரன் இணைந்து வெளியிட இந்தக் காலண்டர் வெளியீட்டு  விழாவை நடத்தினர்.இதைத் தொடர்ந்து  குழந்தைகளுக்கான  ஆடை அணிவகுப்பு போட்டி நடந்தது.

நீர்த் தொட்டியை மையமாக வைத்து எடுக்கப் பட்டுள்ள இந்தப் புகைப்படத் தொகுப்பில் குழந்தைகளை வைத்து பல்வேறு தலைப்புகளில் புகைப்படங்கள் எடுக்கப் பட்டு உள்ளன.