ஸ்ரீகாந்த் – லஷ்மிராய் நடிக்கும் ‘ சவுகார்பேட்டை’

sowkarpet2.bkமாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “

இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று  நடிக்கிறார். நாயகியாக லஷ்மிராய் நடிக்கிறார்.  மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவைசரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை –  ஜான்பீட்டர்  ,   ஒளிப்பதிவு    –  சீனிவாசரெட்டி,பாடல்கள்   –  நா.முத்துக்குமார், விவேகா

கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வி.சி..வடிவுடையான். இவர்  தம்பிவெட்டோத்தி  சுந்தரம்’ என்ற படத்தை இயக்கியதுடன், விரைவில் வெளியாக உள்ள “ கன்னியும் காளையும் செம்ம காதல் ‘படத்தையும் இயக்கி உள்ளார்.

தயாரிப்பு   –  ஜான்மேக்ஸ்

படத்தை பற்றி இயக்குநர் sowkarpet2.வடிவுடையானிடம் கேட்டோம்…

சென்னையில் உள்ள சவுகார்பேட்டை ஜனசந்தடி அதிகமுள்ள இடம் மட்டுமல்ல… பணம் அதிகளவில் புழங்கும் இடமும் கூட.. அப்படிப்பட்ட சவுகார்பேட்டையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கதை !

காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், திகில், ஹாரர் எல்லாமும் இருக்கும் கமர்ஷியல்  படம் இது. ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று முடிவடைகிறது என்றார் வடிவுடையான்.